மேலும் அறிய

திண்டுக்கல் முதல் குமுளி வரை 138 கி.மீ நான்கு வழிச்சாலை திட்ட அறிக்கை தயார். அடுத்த கட்டம் என்ன?

திண்டுக்கல் டூ குமுளி தேசிய நெடுஞ்சாலை ரூ. 12 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 60 அடி அகல சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

திண்டுக்கல் டூ குமுளி நான்கு வழிச்சாலை விரிவாக்க திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரான நிலையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசின் முழு ஒத்துழைப்பை எதிர்பார்த்து உள்ளது.


திண்டுக்கல் முதல் குமுளி வரை 138 கி.மீ நான்கு வழிச்சாலை திட்ட அறிக்கை தயார். அடுத்த கட்டம் என்ன?

தமிழகம் , கேரளா இரு மாநில எல்லைகளை இணைக்கும் வகையில் திண்டுக்கல் டூ குமுளி இடையே 138 கி.மீ., வரை மாநில நெடுஞ்சாலையாக இருந்தது. அந்தந்த மாநில நெடுஞ்சாலைத் துறைகள் வாயிலாக அவரவர் எல்லை வரை இந்த சாலைகள் அரைகுறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. 2010ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக இரண்டு வழிச்சாலையாக இது தரம் உயர்த்தப்பட்டது. 10 அடி அகலத்தில் உள்ள ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் விபத்து அதிகரித்து வருகின்றன. சபரிமலை சீசன் ,கோடை விடுமுறை காலங்களில் இந்த ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோட்டில் திண்டுக்கல் - குமுளி வரை 138 கி.மீ.,க்கு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது.

ரூ. 12 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது. அதன்படி 60 அடி அகல சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ. 3,000 கோடிக்கு மேல் செலவிட மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆனால் இதை செயல்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழக அரசின் முழு ஒத்துழைப்பை எதிர்பார்த்தும் இது வரை வழங்கவில்லை. தற்போது திண்டுக்கல்லில் இருந்து குமுளி செல்வதற்கு குறைந்தபட்சம் இரண்டே முக்கால் மணி நேரம் தேவைப்படுகிறது. ரோடு விரிவாக்க பணிகள் முடிந்தால் ஒரு மணி நேரமாக பயண நேரம் குறையும். சபரிமலை சீசனில் பக்தர்கள் எளிதாக அங்கு சென்று வருவர். விரிவாக்க பணிக்கு இரு புறங்களிலும் தலா 25 அடிக்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதில் விவசாய நிலங்கள் அதிகளவில் வருகின்றன.


திண்டுக்கல் முதல் குமுளி வரை 138 கி.மீ நான்கு வழிச்சாலை திட்ட அறிக்கை தயார். அடுத்த கட்டம் என்ன?

திண்டுக்கல் முதல் குமுளி இடையிலான இரண்டு வழிச்சாலை திண்டுக்கல்லில் துவங்கி வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, கம்பம், குமுளி வரை உள்ளது. நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டால் குமுளியில் இருந்து வண்டிப் பெரியாறு, கோட்டயம், கொல்லம் வரை போக்குவரத்து எளிதாகும். திண்டுக்கல் - குமுளி ரோடு நான்கு வழியாக விரிவாக்கம் செய்வதால் இரு மாநில போக்குவரத்து மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.
திமுக தனியாக போராடி வெல்ல முடியாது.INDIA கூட்டணி குறித்து நாராயணசாமி பேட்டி.
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... யார் இந்த சித்தார்த் போகர்னா - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... அகில இந்திய அளவில் 216-வது இடம் பிடித்த சித்தார்த் போகர்னா !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget