தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.  ஆர்ப்பாட்ட முடிவில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது




ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற ஜனநாயக முறைப்படி, கடந்த 4½ ஆண்டுகளாக நாங்கள் அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறோம்.  அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒரு தனிப்பட்ட குடும்பமோ, தனி நபரோ ஆதிக்கம் செலுத்த முடியாத ஜனநாயக முறையை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த நிலை தொடரும் எனவும் கூறினார்.


சசிகலாவை அ.தி.மு.க. பொதுக்குழு தான் நீக்கியது. யார் எந்த முயற்சியை எடுத்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது. முல்லைப்பெரியாறு ஆற்றுப்படுகையில் இருக்கிற விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாடு கருதி விதிகளுக்கு உட்பட்டு, தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வரும் நிலையில் மின் இணைப்பை துண்டிப்பது கொடுமையான செயல். இந்த நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க. போராட்ட களத்தில் இறங்கும். தன்னை வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்தவர் தகரச் செல்வன்(தங்கதமிழ்செல்வன்). ஜெயலலிதாவுக்கு ஒரு இடர் வந்தபோது நான் முதலமைச்சராக இருந்தேன். மீண்டும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடும் சூழல் வந்தபோது, எம்.எல்.ஏ. பதவியை தங்கதமிழ்செல்வன் ராஜினாமா செய்ய மறுத்தார். விடிய, விடிய, அவரிடம் பேசி நாங்கள் அவரை ஒப்புக் கொள்ள வைத்தோம்.




தன்னை ஆளாக்கிய கட்சிக்கு நன்றியில்லாத தகர செல்வன்(தங்கதமிழ்செல்வன்) என அடிக்கபடி தகரம் என்கிற வார்த்தையை உபயோகித்தார். அதற்கு பதிலாக தங்கதமிழ்செல்வனும் செய்தியாளர்களை சந்தித்து கடந்த 10 ஆண்டுகளாக ஓ பன்னீர்செல்வம் தனது தொகுதிக்கு செய்யாத திட்டங்களை பொதுமக்களிடம் கோரிக்கை வைத்ததால் நான் அவர்களுக்கு நேரில் சென்று அவரது கோரிக்கையை நிறைவேற்றி வருகிறேன் நான் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஓபிஎஸ் கூறுவதற்கு அவருக்குத் தகுதி இல்லை. போடி தொகுதியில் பொதுமக்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் கோரி அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி வருகிறேன் என்னை பொறுத்தவரை பொது மக்கள்தான் அரசு அவர்களுக்கு மாற்றுவதே எனது முழு நேர கடமை இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தமிழக முதல்வரிடம் எந்த ஒரு புகார் செய்தாலும் அவரை நான் சந்திக்க தயாராக உள்ளேன் எனவும் கூறினார்.



ஜெயலலிதா உயிரோடு இருக்கும் காலத்திலேயே ஓ பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தின் காலில் விழுந்து சொத்து சம்பாதித்தவர் . எடப்பாடி பழனிச்சாமியும் அவ்வாறுதான். அங்குள்ள அமைச்சர்கள் அனைவருமே அவ்வாறுதான். கூனிக்குறுகி காலில் விழுந்து சொத்து சேர்த்தனர். தங்களது பதவியை தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் நான் யாருக்கும் அடிபணிந்து கூனிக்குறுகியோ நடந்தது கிடையாது எனவும் கூறினார். சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றினால் ஓ பன்னீர்செல்வம் குடும்பம் சசிகலா காலில் விழுவது உறுதி.


இதே ஓ பன்னீர்செல்வம் தான் ஒரு தொகுதியில் சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என்று கேள்வி எழுப்பி அதற்கு அதனை கட்சியின் பொதுக்குழு தான் முடிவெடுக்கும் என்று கூறினார். அதற்கு ஆண்மை இருந்தால் அன்றைக்கே தன்னால் முடியாது என்று கூறியிருக்கலாம் என்று சொல்ல மறுத்த ஓபிஎஸ் இன்றைக்கு சசிகலாவின் தனிப்பட்ட குடும்ப ஆட்சியை கைப்பற்ற முடியாது என்று கூறி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அதிமுக கட்சியை கைப்பற்றுவார் ஓபிஎஸ் குடும்பமே அவர் காலில் விழுவது என்பது உறுதி எனவும் கூறினார்.



இதனை தொடர்ந்து போடியில் இரு கட்சியினரை சேர்ந்த கட்சி தொண்டர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக திமுக கட்சியினரும். தங்கதமிழ்ச்செல்வனுக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எதிர் எதிரே கண்டன போஸ்டர்கள் ஒட்டி போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர்.