பழனி ரோப்கார் பராமரிப்பு பணி... ராஞ்சியில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட வடக்கயிறு

ரோப்கார் பராமரிப்பின் ஒரு பகுதியாக சுமார் ஆறு இலட்சம் மதிப்பிலான புதிய வடக்கயிறு ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு இன்று இணைக்கும் பணி துவங்கியது.

Continues below advertisement

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பின் ஒரு பகுதியாக சுமார் ஆறு இலட்சம் மதிப்பிலான புதிய வடக்கயிறு ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு இன்று இணைக்கும் பணி துவங்கியது.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். அறுபடை வீடுகளில் ஒரு வீடு பழனி முருகன் கோயிலாகும். இங்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை தருவார்கள். பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய விஷேச நாட்களின் பக்தர்கள் அலைகடலாய் திரண்டு வருவார்கள். இங்கு பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி மலை தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல படிப்பாதை, யானை பாதை, விஞ்ச், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளது.

EPS - Vijay: ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் முதல்வர் வேட்பாளர் யார்?


கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மலை உச்சியை அடைய வசதிக்காக அடிவாரத்திலிருந்து மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் மூலம் செல்லவே விரும்புவர். இயற்கை ரசித்தபடி 3  நிமிட கால அவகாசத்தில் அடிவாரத்திலிருந்து மலை கோவில் செல்வதால் ரோப்காரை பக்தர்கள் விரும்பி செல்கின்றனர்.

TABCEDCO Loan Schemes: தொழில் தொடங்க கடன் வேணுமா? ரூ.15 லட்சம், 6% மட்டுமே வட்டி - அள்ளித் தரும் தமிழக அரசு

ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும், பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்ததால் ஜூலை மாதம் நிறுத்த முடியாமல் இயக்கப்பட்டு வந்தது.  எனினும் அதற்கான பராமரிப்பு காலம் வந்ததால் கடந்த  ஜூலை மாதம் 17ம் தேதி முதல் வருடாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

Crime: சாப்பாடு போட மறுத்த மனைவி! கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்!


மேல் தளம் மற்றும் கீழ் தளத்தில் உள்ள ரோப்கார் உதிரி பாகங்கள் மற்றும் கம்பி வடம், ரோப் பெட்டிகள், அகற்றப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இன்று புதிய வடக்கயிறு மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட சுமார் ஆறு இலட்சம் மதிப்பிலான 720 மீட்டர் நீள வடக்கயிறு இணைக்கும் பணி துவங்கப்பட்டது.  தற்போது புதிய கம்பி வடம் மாற்றும் பணி, இணைக்கும் பணி ஆகியன ஒரு வாரத்துக்குள் நிறைவடைந்த பின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் என தெரியவருகிறது.

Continues below advertisement