பழனி அடிவாரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் நீதிமன்ற உத்தரவால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக கூறி வரும் 24, 25 ஆகிய இரு தினங்கள் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி கடையடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக ”என் மண் என் உரிமை” மீட்பு குழு சார்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உட்பட்ட பழனி அடிவாரம், கிரிவலம் பாதை, சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் அவதி அடைவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் கிரிவலப் பாதையில் எந்த விதமான ஆக்கிரமிப்பு கடைகளும், தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகள் எதுவும் இருக்கக் கூடாது உடனடியாக அகற்ற வேண்டும் கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்றை அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கடைகளை தொடர்ந்து முழுவதுமாக அகற்றப்பட்டு வந்தது.
இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், கடை வியாபாரிகள், சிறு குறு வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாததால் வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ”என் மண் என் உரிமை” என்று சாலை யோர வியாபாரிகள் சார்பில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு கடந்த நேற்று முன்தினம் 20 ம் தேதி கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் பெண் தலைவா்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - விஜய பிரபாகரன்
இந்நிலையில் வருகின்ற 24, 25 அணைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளதையொட்டி இலட்சக்கணக்கான பேர் வருகை தரும் நிலையில், பழனிவாழ் மக்களின் வாழ்வாரத்தை உறுதி செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி அறவழியில் 24 சனிக்கிழமை, மற்றும் 25 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் அடிவாரப் பகுதி மக்கள் அவர்களது வீடுகளிலும் கடைகளிலும் கருப்பு கொடியேற்றி கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
நேற்று இந்து மக்கள் கட்சி, இந்து அமைப்புகள் சார்பில் முருகன் மாநாட்டிற்கு ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் பழனிக்கு வந்தால் அவருக்கு கருப்பு கொடியை காட்டுவோம் என தெரிவித்திருந்த நிலையில் சாலையோர வியாபாரிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், மற்றும் கடைகளை அடைத்து கருப்பு கொடியேற்றி கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.