கேரள மாநிலத்தில் அவ்வப்போது சீசன் போல் நிபா வைரஸ் தொற்று பரவல் இருந்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பருவமழை காலம் தொடங்கி உள்ளதால், நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 500 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்தது. மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 58 வயது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளனர். வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் மருத்துவக் கல்லூரியில் எடுத்த மாதிரிகள் புனேயிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த உயிர்ழப்பு எதிரொலி மாநிலத்தில் மீண்டும் நிtபா வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு உடனடியாக அவசர ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்த 497 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மலப்புறம் – 203 பேர், கோழிக்கோடு – 114 பேர்,ஏர்ணாகுளம் – 2 பேர் இதில் 82 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்படுகின்றனர். அதில் 14 பேர் மிகவும் அபாயம் கொண்டவர்களாக வகைப்படுத்தப்பட்டு, அவர்கள் கடுமையான மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் உள்ளனர். மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன .மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு வீடாக சென்று சுகாதார ஊழியர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி பரப்பப்பட்டு வருகிறது என அமைச்சர் வீணா ஜார்ஜ் விளக்கம் அளித்துள்ளார்.
நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது அரசின் முக்கியப் பொறுப்பு. தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். அதிக அபாயம் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டங்களில் உயர் அபாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, மக்கள் அச்சப்படாமல், ஆனால் கட்டாயம் சுகாதார விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நிபா வைரஸ் முதன்முதலில் 2018-ல் கேரளாவில் பெரும் பரவலாகக் கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். 2021 மற்றும் 2023-இல் ஒற்றை சம்பவங்கள் நிகழ்ந்தன. இது மனிதர்களுக்கு கடுமையான காய்ச்சல், மூச்சுத் தடைகள், நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுத்தும் மற்றும் சுமார் 40–75% மரண விகிதம் கொண்ட கொடிய வைரஸ்.
முககவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கழுவவும், சானிட்டைசர் பயன்படுத்துதல்நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்களையே நம்பவும், சமூக வலைத்தள செய்திகளை நம்ப வேண்டாம். கேரளா அரசு பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிர்ச்சியில் அல்லாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழ்நாடு எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.