மேலும் அறிய

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா: கொடியேற்றம், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வியக்க வைக்கும் நிகழ்வுகள்!

வரும் 27, மார்ச் 3,6 ஆகிய தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து செல்லும்.

தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது நத்தம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் மாசி மாதம் படுவிமர்சையாக திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது. இவ்வாண்டு மாசி பெருந்திருவிழாவையொட்டி இன்று காலைமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாரியம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவிலை சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொரித்த கொடி ஏற்றப்பட்டு கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா: கொடியேற்றம், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வியக்க வைக்கும் நிகழ்வுகள்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா நேற்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி, மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து சந்தன கருப்பு கோவிலில் வந்து சேர்ந்தனர்.

பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில், கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர்.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா: கொடியேற்றம், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வியக்க வைக்கும் நிகழ்வுகள்!

தொடர்ந்து இன்று இரவு சுமார் 9 மணிக்கு  அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். இதை தொடர்ந்து வரும் 27, மார்ச் 3,6 ஆகிய தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து செல்லும். இந்த விழா நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து அக்னிசட்டி எடுத்தல், மாவிளக்கு, கரும்புதொட்டில், அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள்.

வரும் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஊன்றி பின்னர் ஏறுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவதும்   நடைபெறும். மறுநாள் காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோவிலை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மு.க.அழகிரி ஆதரவாளர்கள், செல்லூர் ராஜுவிடம் ஐக்கியம்.. எம்.எல்.ஏ, சீட்டுக் கணக்கு கை கொடுக்குமா?
மு.க.அழகிரி ஆதரவாளர்கள், செல்லூர் ராஜுவிடம் ஐக்கியம்.. எம்.எல்.ஏ, சீட்டுக் கணக்கு கை கொடுக்குமா?
ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் சேர்ந்து மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026 !
ஹோட்டல் நிர்வாகப் படிப்பில் சேர்ந்து மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026 !
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
Embed widget