உண்மையான காரணத்தை கண்டறியாமல் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி கருத்து – சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க மதுரை கிளை உத்தரவு.

வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்
 
நாங்குநேரியைச் சேர்ந்த கணேஷ் பாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு. நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் 2 ஆம் தேதி நடைபெற்ற இரட்டைக் கொலை மற்றும் பலர் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில், போலீசார் (A11 வது) குற்றவாளியாக என்னை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி நிலை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
 
உண்மையான காரணத்தை கண்டறிந்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்
 
இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி உத்தரவில், வழக்கின் உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, விசாரணை ஒரு கட்டத்தில் வேறு கோணத்திலும், பின்னர் சமூக மோதல் என்ற கோணத்திலும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கணேஷ் பாண்டிக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் இடையிலான தொடர்பை நிரூபிக்கும் முக்கிய ஆதாரங்கள், குறிப்பாக தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் சமூக வலைதளக் குழு உரையாடல்கள் உள்ளிட்டவை முறையாக சேகரிக்கப்படவில்லை.
 
இரட்டைக் கொலை போன்ற மிகக் கொடூரமான சம்பவம்
 
இரட்டைக் கொலை போன்ற மிகக் கொடூரமான சம்பவத்தில் விசாரணை சாதாரணமாகவும் இயந்திரத்தனமாகவும் மேற்கொள்ளப்பட்டு, சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை இதையடுத்து கணேஷ் பாண்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு ஜாமீன் உத்தரவாதங்கள் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி, அவர் திருப்பூரில் தங்கியிருந்து தினமும் காலை 10.30 மணிக்கு திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். மேலும், தென் மண்டல காவல்துறை ஐ.ஜி., இந்த வழக்கின் விசாரணை முறையை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, நாங்குநேரி குற்ற வழக்கின் உண்மையான காரணத்தை கண்டறிந்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியிருந்தார்.