பாஜக முருக பக்தர் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு 2 முறை மாவட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் சந்தித்து தற்போது 3வது முறையாக மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து கொண்டிருக்கிறேன்.
ஆளுநர் பயந்து சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, முதல்வர் கூறியது தவறான கருத்து. மக்களின் புரிதலை மாற்றுகிறது. ஏனென்றால் முன்பு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஏன் மறுப்பு தெரிவித்தார்.அதற்கு நீட் தேர்வுக்கு உதாரணமாக ஒன்றை கூறுகிறேன். நீட் தேர்வு குறித்த அதிமுக காலத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆளுநர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிராகரிப்பு செய்யப்பட்டது. நடக்காத விஷயத்தை, நடைபெற முடியாத விஷயத்தை திரும்பவும் அரசியல் ஆதாயத்திற்காக முதலமைச்சர் நீட் தேர்வை விளக்கு பெறுவோம் என தேர்தலில் கூறினார்.
நீட் தேர்வு வராது என்று எல்லாருக்கும் தெரிந்தது. திமுக கொண்டு வந்தததுதான் நீட் தேர்வு. காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் பொழுது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இப்போது வேண்டாம் என்று தீர்மானம் கொண்டு வந்து போகாத ஊருக்கு முதலமைச்சர் வழி சொல்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆளுநருக்கு தான் அதிகாரம் வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் தற்போது உள்ள முதலமைச்சர் ஆளுநருக்கு அதிகாரம் வேண்டாம் தங்களுக்கு தான் அதிகாரம் வேண்டும் என கூறுகிறார்.
முன்னாள் முதலமைச்சருக்கும் இன்னாள் முதலமைச்சருக்கும் உள்ள பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. தமிழக மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் எதுவுமில்லை. மத்திய அரசிடம் நிதி வாங்கி நன்மை செய்ய வேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் முதலமைச்சர் ஈடுபடுகிறாரா என்றால் இல்லை. மொழிய வைத்து அரசியல் செய்கிறார் இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வர வேண்டும்.
கமலஹாசன் கன்னட மொழி விவகாரம் குறித்த கேள்விக்கு, அவரவர்களுக்கு அவரது தாய்மொழி முக்கியம். இதில் அவர்கள் பேசியது தவறு. இவர்கள் பேசியது என நான் கருத்து சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் எனது தாய் மொழி பெரியது. தமிழிசை சௌந்தர்ராஜன் மன்னிப்பு தானே அதைக் கேட்க வேண்டியது தான் அரசியல் பேசுபவர்கள் நிதானமாக பேச வேண்டும் அதனை கமலஹாசன் தவறி உள்ளார் என்று கூறியது குறித்த கேள்விக்கு, மாநிலங்களில் ஒற்றுமை வேண்டும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம். ஏனென்றால் நாங்கள் அகில இந்திய கட்சி எல்லா மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளும் ஒன்றாக இருக்க வேண்டும். நமது நாடு, நமது மொழி, நமது தேசியம் என எல்லோருக்கும் வேண்டும் என கூறினார்.
மதுரையில் கோமாளிகளின் கூட்டணி வெற்றி பெறாது என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு, அது அவரவே அவர் சொல்லி இருப்பார் என்பது தெரியவில்லை.
அண்ணாமலை வெளியிட்ட வீடியோ குறித்து கேள்விக்கு, அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக சில விஷயங்களை கூறியுள்ளார். அவர்களும் ஆதாரப்பூர்வமாக பதில் கூறினால் நன்றாக இருக்கும். என்னை பொருத்த வரை அதே பிரச்சனை தான். அதே கேள்வியை தான் நானும் கேட்கிறேன். நீதிமன்ற கருத்துக்கள் நான் செல்லவில்லை. அதே நேரத்தில் காவல் துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும்பொழுது சரியான முறையில் தாக்கல் செய்திருந்தால் அந்த சாருக்கும் விடை தெரிந்திருக்கும்.
இப்போது அவசரம் அவசரமாக திமுக ஆட்சிகள் வந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கிறது எத்தனையோ பாலியல் வழக்கு 2024 இல் துணை முதல்வர் ரசிகர் மன்றத்தை சேர்ந்த கவிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்தார் அந்த வழக்கு என்ன ஆனது? அண்ணா நகர் மனநலம் குன்றிய பெண்ணை ஒரு வருடமாக பத்து பேர் பாலியல் துன்புறுத்தல் செய்து இருந்தனர். அந்த வழக்கு என்ன ஆனது? 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த மனு கொடுக்க போன பெற்றோர் மீது புகார் சொன்ன வழக்கு என்ன ஆனது? என அண்ணாச்சியிடம் கேட்க வேண்டும். இதற்கு மட்டும் ஏன் இந்த அவசரம் மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இந்த வழக்கில் யாரையும் காப்பாற்றுவதற்காக என்று தெரியவில்லை. நேற்று ஒரே நாளில் 8 கொலை நடந்தது குறித்த கேள்விக்கு காவல்துறை எங்கும் சரியான முறையில் தனது கடமையை செய்யவில்லை. திமுக ஆட்சி வரும்பொழுது எல்லாம் காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறி விடுகிறது." என தெரிவித்தார்.