மேலும் அறிய
முருகன் நம் கலாச்சாரத்திற்கான கடவுள், கலாச்சார அடையாளம், இதுதான் நமது பாரதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆரன் ரவி முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறுபடை வீடுகள் மாதிரி அரங்கில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
Source : whats app
முருகன் நம் கலாச்சாரத்திற்கான கடவுள், கலாச்சார அடையாளம், இது தான் நமது பாரதம் என மதுரையில் முருக பக்தர் மாநாட்டில் ஆறுபடை வீடுகளில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டியளித்தார்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் நாளை ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் முருகனின் அறுபடை வீடுகள் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான முருக பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர். ஹிந்து முன்னணி சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில மாநாடு நடத்தப்படும். கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இதற்கு முன்பு மாநில மாநாடு நடத்தப்பட்டது. கடைசியாக 2018ல் பல்லடத்தில் நடந்தது. 2023ல் நடக்க வேண்டிய மாநாட்டிற்கான பணிகள் தள்ளிப்போனது. ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்தப்படும்.
அறுபடை வீடுகளின் முருகனும் ஒரே இடத்தில்
திருப்பரங்குன்றம், சென்னிமலை விவகாரத்தையடுத்து முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 'முருக பக்தர்கள் மாநாடு' எனும் தலைப்பில் மதுரையில் நடத்தப்படுகிறது. திருப்பதி கோயில் எப்படி உலகம் போற்றும் வகையில் பாதுகாத்து, பராமரிக்கப்படுகிறதோ, அதுபோல் முருகனின் அறுபடை வீடுகளும் பராமரிக்கப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படும். மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதுரை வந்த தமிழக ஆளுநர் ஆரன் ரவி முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறுபடை வீடுகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார். ஒவ்வொரு ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக சென்று சாமி தரிசனம் செய்தார் ஆளுநர். பின்னர் ஆறுபடை வீடுகளுக்கு முன்பாக நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த அறுபடை வீடு மாதிரி அமைப்பை பார்வையிட்டார். வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிவாச்சாரியார் பூரண கும்ப மரியாதை செலுத்தினர். தமிழக ஆளுநர் அறுபடை முருகனுக்கு தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறும்போது, “சிவபெருமானின் மகன் முருகன் அவர் நமக்கானவர். முருகன் நமக்கான அடையாளம். நான் ஆறு அறுபடை வீடுகளுக்கும் சென்றுள்ளேன். ஆனால் அந்த ஆறு அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அறுபடை வீடுகளிலும் இங்கு தரிசனம் செய்தேன். இதனை முன்னெடுத்துள்ள இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள். முருகன் நம் கலாச்சாரத்திற்கான கடவுள். இது நமது கலாச்சார அடையாளம். இது தான் நமது பாரதம். முருகனின் அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டும் என்பது நமது கனவு” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















