காவல்துறையினரின் முழுக்க பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது ; விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யப்பட்டதாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார் ஆனால் காவல்துறை அழைப்பானை அனுப்பி சம்மன் கொடுக்கிறார்கள் இது சட்ட விரோதம் - முகிலன் பேட்டி.
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கு
2017 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் சமூக ஆர்வலரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் வழக்கு விசாரணைக்கு ஆஜராக நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் நேற்றிரவு ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் முகிலனை மதுரை மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தனக்கு 3 மாதமாக உடல்நிலை சரியில்லை என கூறிய நிலையில் மருத்துவசான்றை சமர்பிக்குமாறு கூறி நிபந்தனையுடனான ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முகிலன் ;
2017இல் மதுரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் நான் உள்ளிட்ட 4 பேர் மீதான் வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. 3 மாதம் உடல் நலிவுற்று இருந்ததால் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்பதால் என் மீது வாரண்டு பிறப்பித்தார்கள். அதனை தெரிவித்த போது நாளை வாய்தா உள்ளதால் நேரில் வாரண்ட் ரீ கால் செய்ய வேண்டும் என சிபிசிஐடி காவல்துறையினிடம் தெரிவித்தேன். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பில் 125 கல்குவாரிகளில் கனிம கொள்ளை நடந்துள்ளது ; முதலமைச்சராக அவர்கள் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யப்பட்டதாக 110 விதியின் கீழ் அறிவித்தார் ஆனால் கடந்த சில மதங்களுக்கு முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் எங்கள் மீது வழக்கு போடப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் அழைப்பாணை வந்துள்ளது முதலமைச்சர் ரத்து என்கிறார் காவல்துறை அழைப்பானை அனுப்பி சம்மன் கொடுக்கிறார்கள் இது சட்ட விரோதம். ஈரோடு மாவட்டத்தில் கனிமவளகொள்ளையை தடுக்க முடியவில்லை என 500 பேரும் நீதிமன்றத்தில் சென்று குடிமகனுடைய கடமை செய்யவில்லை என சமூக குற்றவாளியாக இருக்கிறோம் என எங்களை கைது செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென அறிவித்திருந்தோம் ; இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை முடித்துக் கொண்டோம்.
கண்டிஷன் பெயில்
இந்நிலையில் நான் சாலையில் சென்ற போது காவல்துறையினர் என்னை தடுத்து கைது செய்தார்கள். கைது செய்த தகவலை யாருக்கும் சொல்வதற்கு அனுமதிக்கவில்லை நேற்றிரவு 9 மணிக்கு கைது செய்து விட்டு குறிப்பாணை இன்று காலை போடுகிறார்கள்; வழக்கறிஞர்களிடம் பேச அனுமதிக்கவில்லை. போராடிய பின்பு தான் வழக்கறிஞர்களிடம் தகவல் சொல்ல அனுமதி தந்தார்கள். மூன்று மாதமாக மருத்துவ சிகிச்சை பெற்று இருக்கிறேன். மருத்துவ அறிக்கை நீதிமன்றத்திற்கு காட்ட அனுமதிக்கவில்லை நீதிபதி அவர்கள் ஏன் ஆஜராகவில்லை என கேட்டார் மருத்துவ காரணங்களுக்காக மருத்துவ அறிக்கை உள்ளதா என கேட்டார் காத்திருக்க சொன்னார். உங்களை விடுவிக்கிறோம் நாளையும் நீதிமன்றத்தில் வாய்தா இருக்ககிறது ஆஜராக வேண்டும் எனவும் மற்ற மூன்று பேரும் ஆஜராக வேண்டும் என கூறியிருக்கிறார்கள். கண்டிஷன் பெயில் என சொல்லியருக்கிறார்கள் இனி தான் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியும்" என்றார்.
ஏற்கனவே உள்ள நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்குக்கு பொருந்தும்
என்னை கைது செய்வதற்கான காரணம் பெருந்துறைக்கு முதலமைச்சர் வரும்போது காவல் துறையின் பல முறைகேடான செயல்பாடுகளை ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 3000கோனி டன் வெடி மருந்து சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் அது வெளிவந்துவிடும் காவல்துறைக்கு நெருக்கடி ஆகும் எனவும், சிபிசிஐடி இங்கு முறைகேடாக நடந்திருக்கிறது என்பதையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கைது செய்திருக்கிறார்கள். இது காவல்துறையின் முழுக்க பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது என்றார்.
