இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியிருந்தாலும் கூட, எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜூலை 15 முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பதிவாகி, வடக்கு கேரளாவில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. கேரளாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றுகள் வலுப்பெற்றதால், மழை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், காசர்கோட்டில் உள்ள ஹோஸ்துர்க் பகுதியில் அதிகபட்சமாக 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கண்ணூரின் இரிக்கூர், செருவஞ்சேரி மற்றும் பெரிங்கோம் பகுதிகளில் தலா 17 செ.மீ மழையும், காசர்கோட்டின் குடுலு, படன்னக்காடு மற்றும் பேயார் பகுதிகளில் தலா 15 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஜூலை 18, 2025 வெள்ளிக்கிழமையன்று மழை மேலும் தீவிரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IMD வெளியிட்ட தகவலின்படி, கனமழையின் தாக்கத்தை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.