பக்கத்து வீட்டில் குளித்துகொண்டிருந்த பெண்; செல்போனில் போட்டோ எடுத்து ரசித்த இளைஞர் கைது
பக்கத்து வீட்டில் குளியலறையில் குளித்துகொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்து ரசித்த இளைஞர் கைது. சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை.

மதுரை கோ.புதூர் காந்திபுரம் பகுதியில் உள்ள காம்பவுடண்ட் வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்துவரும் பெண் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் குளித்துகொண்டிருந்துள்ளார். அப்போது குளியறையின் அருகே அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் மதுபோதையில் வந்து அங்கு பெண் குளிப்பதை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
மதுரையில் பக்கத்து வீட்டில் குளியலறையில் குளித்துகொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்து ரசித்த இளைஞர் கைது. சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை.
— arunchinna (@arunreporter92) December 20, 2022
Further reports to follow - @abpnadu@GoodSnake_offl | #madurai | @jp_muthumadurai
.
இதனை கண்டுபிடித்த அந்த பெண் கூச்சலிட்ட நிலையில இளைஞர் மணிகண்டன் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இளைஞர் மணிகண்டனை மடக்கிபிடித்து செல்போனை பறிமுதல் செய்து அதனை பார்த்தபோது அதில் அந்த பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்துவிட்டு அதனை அழித்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கோ.புதூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரையடுத்து இளைஞர் மணிகண்டனை கைது செய்த போலீசார் அவனுடைய செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனின் செல்போனில் சில ஆபாச புகைப்படங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இளைஞரிடம் செல்போனை கைப்பற்றிய நிலையில் இது போன்ற புகைப்படங்களை சமூகவலைதளங்களில் எதிலும் பதிவிட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DRUNK AND DRIVE: வாகன ஓட்டிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: மதுரையில் புதிய வகை ப்ரீத் அனலைசர் !
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் - இந்துக்கள் , கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் இணைந்து கட்டிய பள்ளிவாசல் - தமிழகத்தில் மத நல்லிணக்க கிராமம்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

