மதுரையில் தண்ணீர் போர் வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து - 30க்கும் மேற்பட்ட வீடுகளில் வெடித்து சிதறிய மின்சாதன பொருட்கள் - நல்வாய்ப்பாக தப்பிய உயிர்கள்- பொதுமக்கள் போராட்டம்*

நல்வாயப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
 
மதுரை மாநகர் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் SVP நகர் 5வது தெரு பகுதியில் இன்று காலை வீடு ஒன்றிற்கு போர் போடுவதற்காக தண்ணீர் போர் கனரக வாகனமானது வந்துள்ளது. அப்போது ஓட்டுநர் அலட்சியமாக இருந்த நிலையில் தெருவின் நின்று கொண்டிருந்த மின் கம்பியின் மீது மோதியுள்ளது. அதனால் மின்வயர்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியது. விடுமுறை நாள் என்பதால் வீடுகளுக்குள் பொதுமக்கள் இருந்த நிலையில் திடீரென எலக்ட்ரானிக் பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்டவைகள் வெடித்து சிதறியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் சாலையில் மின்வயர்கள் அறுந்துவிழுந்த நிலையில் நல்வாயப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
 
பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து விபத்துக்கு காரணமான போர் வாகனத்தை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு சிறை பிடித்தனர். பின்னர் கூடல்புதூர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுடைய மின்சாதன பொருட்கள் விடுத்து சிதறியதால் அதனை சரி செய்யும் வரை போர் வாகனத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இது குறித்து பேசிய பொதுமக்கள் :
 
"போர் வாகனம் மோதிய விபத்தில் வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் வெடித்து சிதறியது. புதிதாக வாங்கிய டிவிகள் வெடித்தது. வடமாநில தொழிலாளர்களை பணிகளில் ஈடுபடுத்துவதால் மொழி புரியாமல் இதுபோன்ற விபத்து ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். லெட் அலெர்ட் உள்ள நிலையில் மழை பெய்வதற்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும், விடுமுறை நாளில் மின்சாரம் இன்றி தவிக்கிறோம், நாளை பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும்நிலையில் மின்கம்பிகள் அறுந்துள்ளதால் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கையில்..," 
 
மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சேதமடைந்த மின்சேவை வயர்களை அகற்றி, அப்பகுதியில் மின்விநியோகத்தைச் சீரமைத்தனர். சில வீடுகளில் மின்சாதனங்கள் சேதமடைந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த மின்சேவை வயர்களைச் சீரமைத்த பின்னர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள 4 வீடுகளுக்கும் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.