உசிலம்பட்டி அருகே ஆட்டுக் கொட்டகையில் ஆடுகளை திருடி வந்த மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

120 க்கும் அதிகமான ஆடுகளை வளர்ப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், 120 க்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வரும் இவரது ஆட்டுக் கொட்டகையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஆடுகளை திருட முயன்ற போது ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த சுரேஷ் விரட்டியதில் திருட வந்தவர்களில் ஒருவரது செல்போனை தவற விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.,

Continues below advertisement

மது போதையில் திருட்டு

இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வாலாந்தூர் காவல் நிலைய போலீசார்,தவற விட்டுச் சென்ற செல்போன் மூலம் தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடிய போது கருமாத்தூர் அருகே கோட்டையூரைச் சேர்ந்த ரஞ்சித், சமத்துவபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ், வேங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்ற மூவரை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரும் லோடுமேன் வேலை செய்து வருவதாகவும், மூவரும் இணைந்து மது அருந்தும் போது போதையில் இது போன்ற திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வந்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.,