மதுரையில் ரயில்வே கோட்டத்தில் பல்வேறு வசதிகள்
மதுரை ரயில்வே கோட்டம் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 69-வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்ட போது பல்வேறு விசயங்கள் பகிரப்பட்டது. குறிப்பாக ரயில்வே ஊழியர்கள் ஒத்துழைப்பால் மதுரை கோட்டம் அதிகபட்சமாக ரூபாய் 1245 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ரயில்களை வேகமாக இயக்குவதிலும், கால தாமதம் இல்லாமல் பயணித்ததிலும், ரயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருமானத்தை அதிகரித்ததிலும் மதுரைக் கோட்டத்திற்கு ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு லோகோ பைலட்டுகள் உரிய ஓய்வு எடுக்கும் வகையில் ஓடும் தொழிலாளர் தங்கும் அறைகள் பல்வேறு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளன. அதே போல் மதுரையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பயணிகள் வசதிக்க்காக மதுரையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநில பரூணிக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது
பயணிகளின் வசதிக்காக மதுரையிலிருந்து பீகார் மாநில பரூணிக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை - பரூணி சிறப்பு ரயில் (06059) மதுரையில் இருந்து செப்டம்பர் 10, 17, 24, அக்டோபர் 01, 08, 15, 22, 29, நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய புதன்கிழமைகளில் இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு பரூணி சென்று சேரும்.
ரயில் மறு மார்க்கம்
மறு மார்க்கத்தில் பரூணி - மதுரை சிறப்பு ரயில் (06060) செப்டம்பர் 13, 20, 27, அக்டோபர் 04, 11, 18, 25, நவம்பர் 01, 08, 15, 22, 29 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் காலை 07.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.
ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகளுக்கும் இணைக்கப்பட்டுள்ளது
இந்த ரயில்கள் திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர், நாயுடு பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, எலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், துவ்வாடா, விஜயநகரம், ஸ்ரீகாகுலம் ரோடு, பலாசா, குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பட்ரக், பலாசோர், கரக்பூர், அண்டுல், தன்குனி, பார்த்தமான், துர்காபூர், அசன்சால், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜசிடிஹ், ஜாஜா, கியூல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.