இந்திய அஞ்சல்துறை, அஞ்சல் குறியீட்டு எண்களாக (PIN Code) சர்வதேச அரபு எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்களைப் பயன்படுத்தி இந்தியைத் திணிக்க முயற்சித்ததைக் கண்டித்து கடிதம் எழுதினேன். - சு.வெங்கடேசன் பதிவு.

அஞ்சல் துறை விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். 
 
தனது முழு பதிவில்..," அந்திய அஞ்சல்துறை, அஞ்சல் குறியீட்டு எண்களாக (PIN Code) சர்வதேச அராபிக் எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்களைப் பயன்படுத்தி இந்தியைத் திணிக்க முயற்சித்தது. இதனைக் கண்டித்து அக்டோபர் 25ஆம் தேதி தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவரிடம் விளக்கம் கோரி கடிதம் எழுதியிருந்தேன். அக்கடிதத்தில் தேவநாகரி எண்களைப் பயன்படுத்துவது அஞ்சல் துறை விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். 
 
நேரடியாகவும் திணிக்கும் எல்லா முயற்சிகளையும் நாம் தொடர்ந்து எதிர்ப்போம்
 
இது தொடர்பாக, தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் எனக்கு அக்டோபர் 28ஆம் தேதி விளக்கம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் எனக்கு அனுப்பப்பட்ட 16.10.2026 தேதியிட்ட கடிதத்தை (DO letter) , இந்தி மொழியில் மொழிபெயர்க்கும்போது, ​​அனுப்புநர் முகவரியில் உள்ள அஞ்சல் குறியீட்டு எண் (PIN Code) தவறுதலாக தேவநாகரி எண்களில் அச்சிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்காலத் இத்தகைய பிழைகள் ஏற்படாதவாறு உரிய கவனம் செலுத்தப்படும் என்று உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியை மறைமுகமாகவும் நேரடியாகவும் திணிக்கும் எல்லா முயற்சிகளையும் நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.