மதுரையில் கல்லூரி துறை தலைவருக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்தில் கல்லூரி மாணவி புகார் தெரிவித்துள்ளார்.

 

மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ளது அவுட்போஸ்ட்.  இப்பகுதியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக உறுப்புக் கல்லூரியின் பொருளாதாரப்பிரிவு துறைத் தலைவர் ரெஜினா மாணவிகளை அவதூறாக பேசுவதாகவும் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாகவும் புகார் கடிதம் எழுதியுள்ளார். துறைத்தலைவருக்கு எதிராக புகார் அளித்த மாணவர்களை தேர்வு எழுத விடாமல் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள மாணவி துறை தலைவர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீது மாணவி தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பிவைத்துள்ளார்.

 





இதே கல்லூரி பொருளாதார பிரிவு துறைத்தலைவர் மீது ஏற்கனவே உயர்கல்வித்துறை மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மாணவ, மாணவியர்கள் தொடர்பான புகார் குறித்து விசாரணைக்குழு அமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை விசாரணை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




 

ஒரு கல்லூரியில் துறைத்தலைவர் மீதான அடுக்ககான குற்றச்சாட்டுகள் மாணவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாணவி ஒருவர் மிகுந்த அச்சத்தோடு அளித்துள்ள புகாரானது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் புகார் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.