மேலும் அறிய

இரட்டைப் பச்சிளம் குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக சாதனை!

உயிருக்கு ஆபத்தான கடும் தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரு மரபணு குறைபாடாகும். இதற்கு சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், 6 மாதங்களுக்குள் குழந்தை உயிரிழக்க நேரிடலாம். - எனவும் எச்சரிக்கை.

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள இரட்டை பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதியளவு பொருந்திய எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை.

தென் தமிழகத்தில் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனை
 
தென் தமிழகத்திலேயே முதல்முறையாக, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 7 மாதங்களே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ‘டிசிஆர் ஆல்ஃபா-பீட்டா குறைக்கப்பட்ட ஹாப்லோ ஐடென்டிகல் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை’யை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இந்தக் குழந்தைகள் தொற்றுகளை எதிர்க்கும் திறனைக் கடுமையாகப் பாதிக்கும் ‘கடுமையான ஒருங்கிணைந்த நோய் எதிர்ப்புக் குறைபாடு’ (SCID) எனப்படும் அரிய வகை மரபணு நோயால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இடர்வாய்ப்பில் இருந்தனர். (TCR alpha-beta depleted haploidentical Hematopoietic Stem Cell Transplantation in seven-month-old identical twin infants diagnosed with Severe Combined Immunodeficiency (SCID). குறைபாடுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குப் பதிலாக, ஆரோக்கியமான கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல்களைப் பெற்று அதை வழங்குவதே இச்சிகிச்சையின் நோக்கமாகும். முழுமையாகப் பொருந்தக்கூடிய கொடையாளர்கள் கிடைக்காததால், பாதியளவே பொருத்தமாக இருந்த அவர்களின் தந்தையிடம் இருந்து ஸ்டெம் செல்கள் பெறப்பட்டன.
 
பக்கவிளைவு ஏற்படும் அபாயம் அதிகம்.
 
பொதுவாக, இதுபோன்ற சிகிச்சைகளில் கொடையாளரின் நோய் எதிர்ப்பு அணுக்கள் பெறுபவரின் உடல் திசுக்களைத் தாக்கும் GVHD என்ற தீவிரப் பக்கவிளைவு ஏற்படும் அபாயம் அதிகம். இந்தச் சவாலை முறியடிக்க, மருத்துவமனை 'டிசிஆர் ஆல்ஃபா-பீட்டா குறைப்பு' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இது GVHD-ஐ ஏற்படுத்தும் அணுக்களை மட்டும் அகற்றி, நன்மை பயக்கும் பிற அணுக்களைத் தக்கவைக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு, ஸ்டெம் செல்கள் நன்றாகப் பொருந்தி, நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தியிருப்பதால், எவ்விதப் பெரிய சிக்கல்களுமின்றி இரு குழந்தைகளும் விரைவாகக் குணமடைந்து வருகின்றனர். இந்தச் சாதனையை, இரத்தவியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைத் துறைத் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர். T காசி விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நிகழ்த்தியுள்ளனர். இதில் முதுநிலை மருத்துவர் டாக்டர். அன்னபூரணி RM, இணை மருத்துவ ஆலோசகர்களான டாக்டர். அனிதா V மற்றும் டாக்டர். வெங்கடேஸ்வரன் VS ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 
இந்தச் சாதனை குறித்துப் பேசிய டாக்டர். காசி விஸ்வநாதன், “இச்சாதனை உலகத்தரம் வாய்ந்த மேம்பட்ட மருத்துவச் சிகிச்சைகளை நம் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதில் எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. உயிருக்கு ஆபத்தான பிறவி நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு (Inborn Errors of Immunity - IEI) உள்ள குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இது புதிய நம்பிக்கையை அளிக்கிறது. முழுமையாகப் பொருந்திய கொடையாளர் கிடைக்காத நிலையிலும், பாதுகாப்பான 'டிசிஆர் ஆல்ஃபா-பீட்டா குறைப்பு' தொழில்நுட்பம் இத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, உயிர் காக்கும் சிகிச்சைகளை எளிதாக்கியுள்ளது” என்றார்.
 
நோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றி அவர் கூறுகையில், “அடிக்கடி ஏற்படும் கடுமையான, வழக்கத்திற்கு மாறான குணப்படுத்த சிரமமான தொற்றுகள் குழந்தைகளுக்கு இருந்தாலோ அல்லது தொற்றின் காரணமாக, உடன்பிறந்த குழந்தைகள் இறந்திருந்தாலோ, IEI எனப்படும் இப்பாதிப்பு குழந்தைக்கு இருக்கக்கூடும். காது மற்றும் சைனஸ் தொற்றுகள், தொடர்ச்சியான நிமோனியா, குறைவான வளர்ச்சி, மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் ஆகியவை IEI இருப்பதற்கான அறிகுறிகளாகும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதோடு, அவர்களின் எதிர்கால நல்வாழ்வையும் கணிசமாக மேம்படுத்தும்” என்று கூறினார். இந்நிகழ்வில் மருத்துவமனையைச் சேர்ந்த திரு. திலீப் பெர்னார்ட் அவர்களும் கலந்துகொண்டார்.
 
Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சரக்கு வானங்களுக்கு இனி Entry Fee இல்லை - முழு விவரம் !
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சரக்கு வானங்களுக்கு இனி Entry Fee இல்லை - முழு விவரம் !
ராமநாதபுரம்: 192 ஆண்டு பழமையான ஆங்கிலேயர் கால எல்லைக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு!
ராமநாதபுரம்: 192 ஆண்டு பழமையான ஆங்கிலேயர் கால எல்லைக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு!
விஜய் அண்ணாவின் சிங்கப்பெண் திட்டம்: கவர்ச்சியா? கவலை தீர்க்குமா? - ஆர்.பி.உதயகுமார் !
விஜய் அண்ணாவின் சிங்கப்பெண் திட்டம்: கவர்ச்சியா? கவலை தீர்க்குமா? - ஆர்.பி.உதயகுமார் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget