மேலும் அறிய
மதுரை சங்கமம்: நம்ம ஊரு திருவிழா! பாரம்பரிய கலை, உணவு, விளையாட்டு - எல்லாமே உங்களுக்காக!
அமைச்சர் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மதுரை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவினை துவக்கி வைத்தார்.

அமைச்சர் மூர்த்தி
Source : whatsapp
மதுரை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம், தெப்பக்குளம் அருகில், மதுரை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில் அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். இது குறித்து அமைச்சர் தெரிவிக்கையில்...,”தமிழ்நாட்டில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களை உலகறிய தெரிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மிகப் பெரிய விழாவாக கடந்த 2007 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், சென்னை சங்கமம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கிராமியக் கலைஞர்களை ஒரே மேடையில் ஒன்று இணைத்தார். அதே போன்று 2022 ஆம் ஆண்டில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நிகழ்வை கடந்த 4 ஆண்டுகளாக மீண்டும் நடத்தி, ஆயிரக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வாதாரமும் பெருமையும் தந்து கலையையும், கலைஞர்களையும் தொடர்ந்து பாதுகாத்து வருபவர் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் மதுரை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதுரை சங்கமம் என்பது, மதுரையின் பண்பாடும், பாரம்பரியமும், நாட்டுப்புறக் கலைகளும் நவீன கலை நிகழ்ச்சிகளும் இணையும் ஒரு சிறப்பான திறந்தவெளி விழாவாக அமைந்து உள்ளது. இந்த விழாவானது இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாலை 5 மணி முதல் 9 மணி வரை கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்..,” பொதுமக்களுக்கு நாட்டுப்புறக் கலையின் சிறப்பையும் பாரம்பரியத்தின் பெருமையையும் நெருக்கமாக அறிய ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த விழா நடைபெறும் இடத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் இயற்கை விவசாயிகள் தயாரிப்பில் சுவையான பராம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யும் உணவு திருவிழாவும் நடத்தப்படுகிறது. பூம்புகார் நிறுவனத்தின் வாயிலாக கைவினைப் பொருட்கள் விற்பனைக் கூடங்களும் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பார்வையாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மதுரை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் தங்களது கலைத் திறமையினை காட்டியுள்ள கலைஞர்கள் மேன்மேலும் வளர்ந்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் விருதுகளை பெற வாழ்த்துகிறேன். பொதுமக்கள் அனைவரும் இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்”. என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















