மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
Republic Day 2025 : தேசிய கொடியேற்றிய மதுரை ஆட்சியர் ; 3.43 கோடி நலத்திட்ட உதவிகள்... குடியரசு தின விழா கொண்டாட்டம்
பாதுகாப்பு பணியின்போது சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழக அரசின் பதக்கங்களையும், 50க்கும் மேற்பட்டோருக்கு சிறந்த பணிகளுக்கான விருதுகளையும் வழங்கினார்.

காந்தி சிலைக்கு மரியாதை
Source : whats app
76ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று - 3கோடியே 43 லட்சத்து 82ஆயிரத்து 929 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குடியரசு தின கொண்டாட்டம்:
நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தேசிய கொடியை ஏற்கிறார். 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் கருப்பொருள் ஸ்வர்னிம் பாரத் - விராசத் அவுர் விகாஸ்' (தங்க இந்தியா - பாரம்பரியம் மற்றும் மேம்பாடு), இது இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் தொடர்ச்சியான முன்னேற்றப் பயணத்தையும் பிரதிபலிக்கிறது.
அதன்படி, செங்கோட்டையில் இன்று இந்திய கலாச்சாரம் மற்றும் உயர்தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் விதமான அணிவகுப்பு டெல்லியில் நடைபெறுகிறது. அதே போல் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் குடியரசு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், ஆட்சியர் சங்கீதா தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றார். இதில் 3 கோடியே 43 லட்சத்து 82ஆயிரத்து 929 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிங்க- Stock Market: சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை! சென்செக்ஸ் 329 புள்ளிகள் வீழ்ச்சி!
மாவட்ட ஆட்சியர் சங்கீதா தேசியகொடியேற்றினார்
நாட்டின் 76வது குடியரசு தினத்தினை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தேசியகொடியேற்றினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த்சின்ஹா மாநகரகாவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி அர்விந்த் ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம் அலுவலகம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 43நபர்களுக்கு - 3 கோடியே 43 லட்சத்து 82ஆயிரத்து 929 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள்
மேலும் பாதுகாப்பு பணியின்போது சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழக அரசின் பதக்கங்களையும், 50க்கும் மேற்பட்டோருக்கு சிறந்த பணிகளுக்கான விருதுகளையும், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றி அரசு மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தேர்தல் 2025
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement





















