சாலை விபத்துகளை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து குறித்து இந்தியா முழுவதும் ஜனவரி11 முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு வாரம் முடிவடைந்த நிலையில் சாலை பாதுகாப்பு கீதம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட வீடியோ பாடலை மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் வெளியிட்டார். இதனை காவல் போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகசாமி பெற்றுக்கொண்டார்.
இந்த போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் உருவாக்கத்தில் இயக்குநர் ஜான் தேவா இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜெரால்டு இசையமைத்து பாடல் ஆசிரியர் அபினேஸ்வரன் எழுதிய பாடல் வரிகளில் வீடியோ வெளியீடு செய்யப்பட்டது.
இந்த விழிப்புணர்வு வீடியோவில் பாடகர் மதிச்சியம் பாலா பாடலை பாடியுள்ள நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குவது, தலைக்கவசம் இன்றி பைக் இயக்குவது, சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது, பைக் ரேசில் இளைஞர்கள் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடகூடாது என்பது குறித்த காட்சிகளும் வரிகளும் இடம்பெற்றுள்ளது. மேலும் போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மாசி மகத்தில் நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் - முழு விவரம் உள்ளே
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்