வெளி மாநிலங்களை கலக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்... கர்நாடக முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் !
பல ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தியா முழுவதும் பல இடங்களில் பணி செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பல ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தியா முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணி செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர சோழன்
தமிழகத்தைச் சேர்ந்த பலரும் உலக நாடுகள் முழுவதிலும் பல்வேறு இடங்களில் பல்வேறு பொறுப்புகளிலும் பதவி வகித்து வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் உயர் பதவிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கர்நாடக முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்ட முதல்வர் சிவகுமாரின் செயலாளராக மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. சிவக்குமார் துணை முதல்வராக பதவி வகித்த போது அவரது செயலாளராக ராஜேந்திர சோழன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ராஜேந்திர சோழன் ஐஏஎஸ்
மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சோழன் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஆனார். BE மின் பொறியியல் பட்டம் பெற்ற ராஜேந்திர சோழன் இந்திய ஆட்சிப் பணியில் நேரடி தேர்வானார். கர்நாடாக கேடராக பணியில் இணைந்து, பல்வேறு உயர் பதிவகளில் பொறுப்பு வகித்தார். கொரோனா பேரிடர் காலத்தில் கடுமையான பணிகளை மேற்கொண்டார். அசாதாரண சூழலில் இரவு, பகலாக பணியாற்றினார். தமிழ் பற்று கொண்ட இவர், தமிழ் சார்ந்த பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனராக பணி செய்த போது எல்லா தரப்பிலும் இருந்து வரவேற்பை பெற்றார். கொரோனா கொடிய தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். மேலும் கர்நாடக சட்ட சபை தேர்தலின் போது, மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றினார். பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் போது திட்ட இயக்குநராகவும் பணியை திறம்பட செய்துள்ளார். இப்படி பல்வேறு கட்டங்களில் பணிகளை சிறப்பாக செய்து வந்த ராஜேந்திர சோழன், முதல்வர் சிவக்குமார் அவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இதனால் சிவக்குமார் துணை முதல்வாரக இருக்கும் போதே துணை முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது முதல்வர் ஆண பின்னரும் ராஜேந்திர சோழனை அவரது செயலாளராக நியமித்துள்ளது, சக அதிகாரிகள் மற்றும் கர்நாடக வாழ் தமிழர்களும் பாராட்டியுள்ளனர்.
தமிழகத்தை கலக்கும் ஐஏஎஸ்
தமிழகத்தில் இருந்து செல்வகுமார் ஐஏஎஸ், மணிவண்னன் ஐஏஎஸ், ஜெயலெஷ்மி ஐஏஸ், சாலமன் ஆரோக்கிய சாமி, கதிரவன் ஐஏஎஸ் என பலரும் வெளி மாநிலங்கள் சிறப்பாக பணி செய்தவர்கள். அதே போல் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தியா முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணி செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















