Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (25.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
 
பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை
 
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் இன்று பல்வேறு பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
 
பைபாஸ் ரோடு (காலை 10:00 - மாலை 5:00 மணி)
 
மதுரை பைபாஸ் ரோடு, ராம்நகர், துரைசாமி நகர், வானமாமலை நகர், முத்துப்பாண்டி நகர், அனீஸ் கான்வென்ட் ஏரியா, விந்தியாசல் அபார்ட்மென்ட், ஜெய் நகர், சுரேந்தர் நகர், கற் பகநகர், சிவசக்தி நகர், சாய்பாபா கோயில், ராஜம் நகர்,மீனாட்சி நகர், கே.கே.கார்டன், திருவள்ளுவர் விரிவாக்கம், ராகவேந்திரா நகர், அசுவதா பள்ளி, தானத்துவம் ரோடு, விவாபா அபார்ட்மென்ட்.
 
அழகர்கோவில் பகுதி ( 9:00 - மாலை 4:00 மணி)
 
பொய்கைகரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, துாயநெறி, மாத்தூர், வெள்ளியங் குன்றம் புதுார், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி.