Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (20.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை  
 
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் நாளை பல்வேறு பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. மதுரை சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட, விக்கிரமங்கலம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
 
விக்கிரமங்கலம் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
 
விக்கிரமங்கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன்நகள், நரியம்பட்டி, செக்கான்கோவில்பட்டி. கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்பநாயக்கனூர். மேலபெருமாள்பட்டி. கோழிப்பட்டி. கிருஷ்ணாபுரம். மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம். பிரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிபட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.