Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (02.08.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
Madurai Power Shutdown - மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் விநியோகம் நிறுத்தம்
அந்த வகையில் நாளை 02.08.2025 தேதி சனிக்கிழமை அன்று மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட, வாடிப்பட்டி துணைமின்நிலையம், கொண்டையம்பட்டி துணைமின்நிலையம் மற்றும் அய்யங்கோட்டை துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், இராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், இராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி. அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களர் மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.
கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம். அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.