மேலும் அறிய
மதுரையில் இசையோடு, ருசியோடு விளையாடு திருவிழா - அனுமதி இலவசம்.. எப்போ, எங்கே ?
மதுரை மாநகராட்சி இசையோடு, ருசியோடு விளையாடு நம்ம ஊரு திருவிழாவில் போட்டிகள் நடத்தவும், அரங்குகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.

இசையோடு, ருசியோடு விளையாடு
Source : whats app
மதுரை மாநகராட்சி சார்பில் மூன்று நாட்கள் ”இசையோடு ருசியோடு விளையாடு ”நம்ம ஊரு திருவிழா” நமக்கான பெருவிழா நடைபெறுகிறது.
இசையோடு ருசியோடு விளையாடு
மதுரை மாநகராட்சி மற்றும் ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து தமுக்கம் மைதானத்தில் வரும் 15.08.2025 முதல் 17.08.2025 வரை மாலை 4 மணி முதல் 9 மணி வரை மூன்று நாட்கள் ”இசையோடு ருசியோடு விளையாடு நம்ம ஊரு திருவிழா, நமக்கான பெருவிழா”என்ற தலைப்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
என்ன நிகழ்ச்சி - விளையாட்டுகள் - உணவு
இந்த உணவுத் திருவிழாவில் தினந்தோறும் மாலை 4 மணி முதல் பல்வேறு விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், டுரிங்டாக்கிஸ், ஆயாக் கடை, சாயாக் கடை, மதுரை சிறப்பு உணவுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என குடும்பமாய், குதுகலமாய் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடும் வகையில் சிறப்பாக நடைபெற உள்ளது. மேலும் கலைத்திறமை உள்ள குழந்தைகளுக்க டேலண்ட் ஹண்டர்ஸ் அகாடமி மூலம் மாறுவேட போட்டி, நடன போட்டி, ஓவிய போட்டி, கோலப் போட்டி, ஒரு நிமிட கலைத்திறன் போட்டி உள்ளிட்ட பலவேறு போட்டிகள் நடைபெற இருக்கிறது.
தொடர்பு எண்கள்
மதுரை மாநகராட்சி இசையோடு, ருசியோடு விளையாடு நம்ம ஊரு திருவிழாவில் போட்டிகள் நடத்தவும், அரங்குகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் ஹலோ ஈவண்டஸ் 9843615157, 9843015157, 9790959357, 8098984545 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியினை பொதுமக்கள் காண்பதற்கு அனுமதி இலவசம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
வணிகம்





















