மேலும் அறிய

Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !

மதுக்கடைகள் பாதுகாப்பதை விட மலைகளை பாதுகாப்பது முக்கியம் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டால் திரும்ப கிடைக்குமா?- நீதிபதிகள் கேள்வி

மதுரை மாவட்டம்  பேரையூர் அருகே உள்ள பழமையான எச்சங்களை கொண்ட ஓணான் கரடு மலையில் கல் குவாரி செயல் பாட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு. அரசு மது கடைகளை பாதுகாக்க காட்டும் அக்கறையை  பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை - நீதிபதிகள் வேதனை.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல்
 
நம்மாழ்வார் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பெத்தணன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு...," நான் இந்திய ராணுவத்தின் முன்னாள் படைவீரர் பேரையூர் தாலுகா எஸ்.பாப்பிநாயக் கன்பட்டி, சங்கரலிங்கபுரம் கிராமங்களுக்கு அருகில், சலுப்பென் கரடு, ஓணான் கரடு மற்றும் பெருமாள் மலை ஆகிய அமைந்துள்ளது.  இதில் ஓணான் கரடு எனப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குன்று உள்ளது. இந்த மலை பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்விடங்களையும், புதைக்கும் முறைகளையும் சுட்டிக்காட்டும் பல தொல் பொருள், வரலாற்று, பண்பாட்டு எச்சங்களை கொண்டது இப்பகுதி குறிப்பிடத்தக்கது  எனவே இயற்கை முக்கியத்துவம் வாய்ந்து இருக்கிறது. இந்த மலை இயற்கையான நீர்ப்பிடிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்பின் ஒருபகுதியாக உள்ளது. மலையின் இயற்கை நீர் வளங்கள் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சார்ந்தே அப்பகுதி கிராமங்கள் உள்ளன.
 
ஓணான் கரடு மலையில் குவாரி நடத்த அனுமதிக்கக் கூடாது
 
இப்பகுதியில் பழங்கால கட்டுமானங்கள், கல் எச்சங்கள், பழங்கால உருக்கு உலை, முதுமக்கள் தாழிகள், சிற்பங்கள், கல்வெட்டுகள், குறியீடு கள் மற்றும் பிற தொல்லியல் பொருட்கள் உள்ளிட்ட பல் வேறு பழங்கால எச்சங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவை சுமார் 2,000 முதல் 3,000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த மலையில் கல் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த பகுதியில் கல் குவாரி செயல்பட்டால் பழமையான எச்சங்கள் அனைத்தும் அழிக்கப்படும். எனவே தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதும், பல்லுயிர் வளத்தை கொண்டுஇருக்கும். ஓணான் கரடு மலையில் குவாரி நடத்த அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு வில் கூறியிருந்தார்.
 
அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
 
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வேல்முருகன், நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அப்பொழுது நீதிபதிகள்.. அரசு மது கடைகளை பாதுகாக்க காட்டும் அக்கறையை  பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை. மதுக்கடைகள் பாதுகாப்பதை விட மலைகளை பாதுகாப்பது முக்கியம் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டால் திரும்ப கிடைக்குமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளி சாதனை: ஒரு கோடிக்கு மேல் விற்பனை, விவசாயிகள் மகிழ்ச்சி!
வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளி சாதனை: ஒரு கோடிக்கு மேல் விற்பனை, விவசாயிகள் மகிழ்ச்சி!
ரஷ்யாவில் 10 நாட்கள் தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த மதுரை மருத்துவ மாணவி பத்திரமாக தாயகம் திரும்பினார்!
ரஷ்யாவில் 10 நாட்கள் தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த மதுரை மருத்துவ மாணவி பத்திரமாக தாயகம் திரும்பினார்!
பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை மாற்றம்! லட்டு முதல் புளியோதரை வரை புதிய விலை என்ன?
பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை மாற்றம்! லட்டு முதல் புளியோதரை வரை புதிய விலை என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Embed widget