உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். சித்திரைத் திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும்.  இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து 'பார்வதி' என்ற சுமார் 26 வயதுடைய பெண் யானை ஒன்று கோயிலில் வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2000-ல் வாங்கப்பட்ட இந்த யானை கோயில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு கோயில் விழாவில் பங்கேற்ற பார்வதி யானை விழாவின்போது காலில் சிறிய அளவு காயம் ஏற்பட்டது இதனையடுத்து  சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதிக கவனத்துடன் யானையை பராமரிக்க வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

 


 

இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு  பார்வதி யானைக்கு  இரண்டு கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் ஏற்பட்டதன் காரணமாக முதலில் சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னர் தாய்லாந்து மருத்துவகுழுவினா் கோயிலுக்கு அழைத்துவரப்பட்டு யானையை நேரடியாக பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.  இதனை தொடர்ந்து யானையின் உடல்நலன் குறித்து காணொளி மூலமாகவும் ஆலோசனைகளை அளித்து வருகின்றனர்.

 


 

இதனிடையே கோயில் யானை பார்வதிக்கு தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரமாக தொடர் வயிற்றுபோக்கு ஏற்பட்ட நிலையில் யானை சோர்வாக உள்ளதால் யானை நடைபயிற்சிக்கு செல்லவில்லை, தொடர்ந்து கால்நடை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு வாரமாக எழுந்து நடக்கமுடியாத நிலையில் படுத்த நிலையிலயே பார்வதி யானை இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 4890 கிலோ எடை இருந்த பார்வதி யானை தொடர் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது எடை குறைந்தும் காணப்படுகிறது.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண