பொருட்காட்சிக்கான அனுமதி இலவசம். பொருட்காட்சி அனுமதி சீட்டு எண்களின் அடிப்படையில் குலுக்கல் முறையில் மதியம் 1 மணி, 3 மணி, 5 மணி, 7, மணி மற்றும் 9 மணி ஆகிய நேரங்களில் தினசரி ஐந்து பரிசுகளும், பொருட்காட்சி இறுதி நாளன்று மெகா பம்பர் பரிசாக Hero Honda பைக் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2025
 
மதுரை தமுக்கம் மைதானத்தில் 23.04.2025 புதன்கிழமை முதல் 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் மிகச் சிறப்பான முறையில் பிரம்மாண்டமாக 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன் நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலுள்ள சிறிய, பெரிய உற்பத்தியாளர்களும், வணிக நிறுவனங்களும் ஸ்டால்கள் அமைத்து அதி நவீனமான பொருட்களையும், சாதனங்களையும் பார்வைக்கு வைத்து விற்பனை செய்ய உள்ளனர். தமிழக அரசின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களும் அதிகளவில் ஸ்டால்கள் அமைக்கவுள்ளனர். சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பொருட்காட்சியை பார்வையிட்டு பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருட்காட்சியில் உணவகங்கள், சிறுவர் சிறுமிகளுக்கான நவீன விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட உள்ளன. தென்மாவட்டத்தில் முதன்முறையாக குளுகுளுப் பேருந்தில் 12 விளையாட்டுகள் இடம்பெற உள்ளன. 
 
மெகா பம்பர் பரிசுகள் வழங்கப்படவுள்ளது
 
பொருட்காட்சிக்கான அனுமதி இலவசம். பொருட்காட்சி அனுமதி சீட்டு எண்களின் அடிப்படையில் குலுக்கல் முறையில் மதியம் 1 மணி, 3 மணி, 5 மணி, 7, மணி மற்றும் 9 மணி ஆகிய நேரங்களில் தினசரி ஐந்து பரிசுகளும், பொருட்காட்சி இறுதி நாளன்று மெகா பம்பர் பரிசாக மதுரை நிப்பான் பர்னிச்சர் நிறுவனம் வழங்கும் Hero Honda Motor Cycle ஒன்றும், பம்பர் பரிசுகளாக மதுரை ஸ்ரீ பாண்டின் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டி.வி.எஸ் ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் ஒன்றும், சத்யம் குருப் ஆஃப் கம்பெனிஸ் வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஒன்றும், மதுரை விங்ஸ் என்ஜினியரிங் கம்பெனி வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஒன்றும், விக்னேஷ் பார்மா குரூப் வழங்கும் எல்.ஜி டபுள் டோர் பிரிட்ஜ் ஒன்றும்  வழங்கப்பட உள்ளன. பொருட்காட்சியினை 23.04.2025-ம் நாள் புதன்கிழமை காலை 11.00 மணியளவில் மதுரை, தமுக்கம் கன்வென்ஷன் சென்டரில் வணக்கத்திற்குரிய மதுரை மாநகர மேயர் இந்திராணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.