குடும்ப வறுமையின் காரணமாக தனது கல்வியை பாதியில் நிறுத்திய  மாணவி தனது அசல் சான்றிதழை வழங்க கோரி வழக்கு. மாணவர்களின் அசல் கல்விச்சான்றுகளை கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு திரும்ப தர மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து.

Continues below advertisement

சான்றிதழ்களை வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சார்ந்த நிவேதா என்ற மாணவி தாக்கல் செய்த வழக்கு. நான் புதுக்கோட்டை  இலுப்பூரில் உள்ள மதர் தெரசா கல்லூரியில் கடந்த 2024 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடத்திய கலந்தாய்வு மூலம் பி.எஸ்.சி (அக்ரி) விவசாய படிப்பில் சேர்ந்தேன். முதல் வருட கல்வி கட்டணமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வங்கி காசோலை மூலம் செலுத்தினேன் முதல் வருடம் முதல் பருவ தேர்வுகளை முடித்த பின் என் குடும்பத்தின் பொருளாதார சிக்கல் காரணமாக இரண்டாம் பருவ தேர்வுக்கான கட்டணம் செலுத்த முடியவில்லை இதனைத் தொடர்ந்து கல்லூரியும் என்னால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் எனது பனிரெண்டாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண்களை தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் எனது சான்றுகளை தர மறுக்கின்றனர்.

Continues below advertisement

மாற்றுச் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு புகார் தெரிவித்தேன். பதிவாளர் தரப்பில் இருந்து 2 இலட்ச ரூபாய் கட்ட சொல்லி மெயில் அனுப்பி உள்ளனர். இது சட்டவிரோதம் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளுக்கு முரணாக உள்ளது. எனவே எனது பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று  மற்றும் மாற்றுச் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

கல்லூரி நிர்வாகம்  உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில்  வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி குடும்ப சூழல் காரணமாக மாணவி கல்லூரி செல்ல முடியாத சூழலில் இரண்டு லட்ச ரூபாய் கேட்பது ஏற்க முடியாது இது உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உள்ளது என வாதிட்டார். கல்லூரி திறப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக விதிகளின்படியே 2 லட்ச ரூபாய் மனுதாரர் தரப்பில் கேட்கின்றோம் விதிகளுக்கு முரப்பாக நாங்கள் செயல்படவில்லை என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாணவர்களின் அசல் கல்விச்சான்றுகளை  கல்லூரி நிர்வாகம் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவே மூன்று வாரத்தில் அனைத்து கல்வி சான்றுகளையும் கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு வழங்க வேண்டும் பல்கலைக்கழக விதிகளின்படி இழப்பீட்டுத் தொகை வசூலிக்க வேண்டும் என்றால் கல்லூரி நிர்வாகம்  உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.