நீதிபதிபிறப்பித்த உத்தரவில், கரூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, வழக்கு விசாரணையை வருகிற 11ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடாக
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி யின் நிர்வாகி செந்தில்குமார்,
இந்த கல்லூரிக்கு, செவிலியர் படிப்பு படிக்க மாணவியாக வந்த பழங்குடி மலைவாழ் பகுதியை சேர்ந்த சிறுமி. இந்த சிறுமியை கல்லூரி நிர்வாகி, பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி
கடந்து 2025 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார். அதில், போக்சோ வழக்கில் முதல் குற்றவாளி செந்தில்குமாருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மனதளவிலும் உடலளவிலும் சமுதாய பார்வையிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடாக கரூர் மாவட்ட ஆட்சியர் வழங்க வேண்டுமென்று என உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், கரூர் நீதிமன்ற எதிர்த்து, சிறையில் உள்ள செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தக்கல் செய்தார். அதில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடுத் தொகை இதுவரை வழங்கவில்லை.
கரூர் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.7 லட்சம்
நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி, கரூர் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு தொகை வழங்காததால், கரூர் மாவட்ட ஆட்சியர் திங்கட்கிழமை பிற்பகலில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்திரவிட்டு வழக்கு விசாரணையை பிற்பகலில் ஒத்தி வைத்து உத்திரவிட்டார். இந்த சூழலில் நண்பகலில் மீண்டும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, கரூர் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு தொகை வருகிற 11-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதி கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிபிறப்பித்த உத்தரவில், கரூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, வழக்கு விசாரணையை வருகிற 11ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
