நெல்லை கவின் கொலை செய்யப்பட்ட பகுதி கேமரா சிசிடிவி காட்சிகளை சேகரித்து  ,நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் , நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை அதிகாரி பதில் மனு  தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 
பட்டப்பகலில் கவின் கொலை
 
நெல்லை  சேர்ந்த இளம்பெண்  ஒருவரை கவின் என்ற வாலிபர் காதலித்துள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் தம்பி சுர்ஜித் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கவினை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சப் இன்ஸ்பெக்டர் சரவணன், சுர்ஜித்துக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜெயபால்  ஆகியோரை சி பி சி டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர்  சரவணன், ஜெயபால் ஆகியோர் தங்கள் மீதான  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் , செய்தனர்.
 
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 
இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக எதிர் தரப்பினர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப வேண்டும். இந்த வழக்கில் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் இந்த கொலை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து இந்த நீதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று   உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது...,”கொலை நடந்த சம்பவம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவு பதிவுகளை சேகரித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்  தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த சிசிடிவி பதிவுகள், விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த சிசிடிவி பதிவுகள் 6 மணி நேரம் இருப்பதால், விசாரணை அதிகாரி டிஎஸ்பி, அந்த காட்சிகளை பார்வையிட்டு அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.