மடப்புரம் காவலாளி அதிக்குமார் கொலை வழக்கில் காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு.. நீதிபதியின் கடும் கண்டனம், அதிர்ச்சி உத்தரவு!
அஜித் குமார் கொலை வழக்கை 6 மாதத்தில் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவலர்கள் ஜாமின் வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
அஜித்குமார் கொலை வழக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28-ஆம் தேதி அவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
ஜாமின் மனு
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், வழக்கறிஞர் முகைதீன் பாஷா ஆஜராகி இந்த வழக்கில் 94 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அஜித்குமார் நகையை திருடிய அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை காணாமல் போன நகையை கண்டுபிடிக்க முயவில்லை என தெரிவித்த வழக்கறிஞர். டிஎஸ்பிஐ தவிர்த்து வேறு உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினர்தான் அஜித்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளது எனவே காவலர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் உயர் அதிகாரி ஒருவர் அடிக்க சொல்லி உத்தரவிட்டால் அடித்து கொலை செய்வதா அடிக்க முடியாது என்று ஒரு காவலர் ஆவது ஏன் சொல்ல மறுக்கின்றனர்.
வழக்கு தள்ளுபடி
சட்டவிரோதமாக செயல்பட முடியாது என உயர் அதிகாரியிடம் சொல்லுங்கள் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்திற்கு வாருங்கள் நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும் என தெரிவித்த நீதிபதி இந்த வழக்கில் போலீசார் செய்த குற்றம் மன்னிக்க முடியாத குற்றம் எனவே மீதமுள்ள குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும். டி எஸ் பி க்கு உத்தரவிட்ட அதிகாரி யார் என்று கண்டுபிடிக்க முடியாது அந்த அளவுக்கு உத்தரவிட்ட அதிகாரி பாதுகாக்கப்பட்டு வருகிறார் என தெரிவித்த நீதிபதி மேலும் விசாரணை முடியும் வரை யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது எனவே அஜித்குமார் மரண வாழ்க்கை விசாரணையை நீதிமன்றம் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும். என உத்தரவிட்டு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.























