மேலும் அறிய
Advertisement
பிரசவ வார்டு லிப்ட் கோளாறு: தவித்த பெண்கள்... உடைத்து மீட்ட மீட்புப்படை.. மதுரையில் திக் திக் திக்!
Madurai Govt Hospital: கோரிப்பாளையம் பகுதியில் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு லிப்ட் கோளாறு ஏற்பட்டு உள்ளே தவித்த 10 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடியது மதுரை அரசு ராசாசி மருத்துவமனை. மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் அரசு ராசாசி மருத்துவமனையால் பயன்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிக்களை வெற்றிகரமாக செய்யப்பட்டுவருகிறது. கொரோனா காலகட்டத்தில் அதிகளவு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
சமீபத்தில் தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 2 பட்டதாரி இளம்பெண்கள் தோற்றத்தில் திருநம்பிகளாக இருந்து வந்த நிலையில் இருவருக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு திருநம்பிகளாக மாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை படைத்தது. இதற்காக மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்த்தது. இந்நிலையில் மருத்துவமனை பிரசவ வார்டு லிப்ட் கோளாறு ஏற்பட்டு, 10 பேர் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அரசு ராசாசி மருத்துவமனையில் தாய்சேய் மற்றும் குழந்தைகளுக்கு பிரத்யேகமாக சிகிச்சை அளிக்கும் தனி வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் செயல்படும் லிப்டிங் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதி வழியில் நின்றது. இதில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் மாட்டிக் கொண்டுள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தாய் சேய் நல மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்ள லிப்ட் பழுது ஏற்பட்ட நிலையில் உள்ளே சிக்கிகொண்ட 10பேரை லிப்டை உடைத்து தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மதுரையில் நேற்றைய கொரோனா அப்டேட் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் - TN Corona Update: மதுரையில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு: சிவகங்கையில் 16 பேர்!
இது குறித்து தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி சுப்ரமணி செய்தியாளர்களிடம்...,” நாங்கள் சென்ற போது 2வது தளம் அருகே லிப்ட் நின்றிருந்தது. கதவை திறக்கும் கருவி மூலம் லிப்ட் கதவருகே கிடைத்த சின்ன இடைவெளியை மெல்ல விரிவடை யச் செய்தோம். லிப்ட்டை மேலே இழுத்து அரைமணி நேரத்திற்குள் அனைவரையும் மீட்டோம். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion