வாங்க சார், வாங்க மேடம் இங்க உட்காருங்க என ரயிலில் சீட் பிடித்துக் கொடுப்பது போல்  நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர் மற்றும் நகையை விற்றுக்கொடுத்த நபர் ஆகிய இருவர் கைது.
வாங்க மேடம் வாங்க இங்க உட்காருங்க - பயணிகளை ஏமாற்றும் குற்றவாளி கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கார்த்திக் (38) மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் பயணிகளிடம் பேச்சுக் கொடுத்து, முன் பதிவு அல்லாத பெட்டியில் ”வாங்க மேடம் வாங்க இங்க உட்காருங்க, இந்த சீட்ல உட்காருங்க” - என கூறி பெண்களுக்கு அமர, இடம் பிடித்து கொடுப்பது போல், ரயிலில் ஏறி அமர்ந்து இடம் பிடித்து கொடுத்துள்ளார். பின்னர் அந்த பயணிகள் அயர்ந்து தூங்கும் நேரத்தில் பேக்கில் இருக்கும் பணம், நகையை திருடிவந்துள்ளார். பின்னர் திருட்டு நகைகளை திண்டுக்கல் மாவட்டம் துள்ளிபட்டி நகை வடிவமைப்பாளர் பிரபாகரனிடம்  கொடுத்து பணமாக மாற்றி ஆடம்பரமாக இருந்துவந்துள்ளார்.
 
நடத்திய விசாரணையில் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார் ரயிலில் பயணிப்பவர்களிடம் தொடர்ந்து  இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக இருப்பு பாதை காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் ரயில்வே நிலையத்தில் உள்ள  சி.சி.டி.வி., கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கடலூரை சேர்ந்த   கார்த்திக்கின் நடமாட்டம் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நகையை திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில் கார்த்திக் மற்றும் அவருக்கு உதவியாக நகைகளை வாங்கி விற்பனை செய்துவந்த பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.