மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட் நிலவரம் என்ன, இன்று நீண்ட நேரம் பூ விற்பனை நடைபெற்று வருகிறது.
நாளை 20.10.2025 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பூக்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்
பூக்களின் விலை
* மதுரை மல்லி கிலோ ரூ.2000,
* பிச்சி ரூ.1500,
* முல்லை ரூ.1500,
* செவ்வந்தி ரூ.120,
* சம்பங்கி ரூ.100,
* செண்டு மல்லி ரூ.50,
* கனகாம்பரம் ரூ.1500,
* ரோஸ் ரூ.150,
* பட்டன் ரோஸ் ரூ.180,
* பன்னீர் ரோஸ் ரூ.150,
* கோழிக்கொண்டை ரூ.70,
* அரளி ரூ.200,
* மரிக்கொழுந்து ரூ.100,
* தாமரை (ஒன்றுக்கு) ரூ.20 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. 2 டன் முதல் 2.5 டன் வரத்து உள்ளது. தீபாவளியை ஒட்டி பூக்கள் அதிகமான வரத்து இருக்குமென எதிர்பார்த்த நிலையில் மழையின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது. என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்தார்.