மதுரை கோட்டத்தின் சாதனைகள்
மதுரை ரயில்வே கோட்டம் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 69-வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்ட போது பல்வேறு விசயங்கள் பகிரப்பட்டது. குறிப்பாக ரயில்வே ஊழியர்கள் ஒத்துழைப்பால் மதுரை கோட்டம் அதிகபட்சமாக ரூபாய் 1245 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ரயில்களை வேகமாக இயக்குவதிலும், கால தாமதம் இல்லாமல் பயணித்ததிலும், ரயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருமானத்தை அதிகரித்ததிலும் மதுரைக் கோட்டத்திற்கு ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு லோகோ பைலட்டுகள் உரிய ஓய்வு எடுக்கும் வகையில் ஓடும் தொழிலாளர் தங்கும் அறைகள் பல்வேறு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை கோட்டத்தின் புதிய ரயில்வே மேலாளராக ஓம் பிரகாஷ் மீனா பதவியேற்பு, வரவேற்பை பெற்றுள்ளது.
Om Prakash Meena Assumes Charge as Divisional Railway Manager
மதுரை கோட்ட ரயில்வே மேலாளராக ஓம் பிரகாஷ் மீனா சமீபத்தில் பதவியேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு கிழக்கு ரயில்வேயில் கட்டுமான பிரிவில் சாலை பாதுகாப்பு திட்ட தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் 1996 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பொறியாளர் சேவை பிரிவை சேர்ந்தவர். இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பிறகு 1998 ஆம் ஆண்டு ரயில்வே பணியில் சேர்ந்தார். இவர் ராஜஸ்தான் ஜோத்பூர் எம்.பி.எம். பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.
Leadership Course in Malaysia and Advanced Management Training at INSEAD, Singapore.
இவர் வடமாநிலங்களில் உள்ள ஆக்ரா ஜெய்ப்பூர் மற்றும் பிகானேர் கோட்டங்களில் கோட்ட பொறியாளராகவும், கூடுதலாக ஆக்ராவில் முதுநிலை பொறுப்பு கோட்ட பொறியாளராகவும் பணியாற்றியவர். வட மேற்கு ரயில்வேயில் ரயில் நிலைய மேம்பாட்டு முதன்மைப் பொறியாளராக பணியாற்றியவர். சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் தலைமை பண்பு வளர்ச்சி குறித்த கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். இதுவரை கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த சரத் ஸ்ரீவத்சவாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் ஓம்பிரகாஷ் மீனா புதிய மேலாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.