திருத்தங்கள் மற்றும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெற்றிடவும் (படிவம் 8) மனுச் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டப் பணியாக 27.10.2025 அன்று வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களுக்கு (ஆண்கள் 13,44,402 ; பெண்கள் 13,95,938 ; மூன்றாம் பாலினத்தவர் 291 ; ஆக மொத்தம் 27,40,631) கணக்கீட்டுப் படிவம் (Enumeration Forms) வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாக 04.11.2025 முதல் வினியோகம் செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இன்று (19.12.2025) வெளியிடப்படுகிறது.
10 சட்ட மன்ற தொகுதி
இன்று வெளியிடப்படும் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து ஆண்கள் 11,58,601 பெண்கள் 12,01,319 மூன்றாம் பாலித்தனவர் 237 ஆக மொத்தம் 23,60,157 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். களப்பணியின் மூலம் முகவரியில் இல்லாதவர்கள் 38,036, குடியிருப்பு மாறியவர்கள் 2,36,068, இறந்தவர்கள் 94,432, இரட்டைப்பதிவு 11,336, மற்றவை 602 ஆக மொத்தம் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 19.12.2025 முதல் 18.01.2026 வரை பெயர்களைச் சேர்க்க (படிவம் 6), நீக்க (படிவம் 7), முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெற்றிடவும் (படிவம் 8) மனுச் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இப்படிவத்துடன் உறுதிமொழிப் படிவம் மற்றும் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து அளித்திடல் வேண்டும். பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 17.02.2026 அன்று வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தகவலை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவின்குமார், தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தொகுதியின் எண் மற்றும் பெயர்
188.மேலூர் - (ஆண்கள் 1,09,934) - (பெண்கள் 1,10,988) (மூன்றாம்பாலினம் 9) மொத்தம் -2,20,931
189. மதுரை கிழக்கு - (ஆண்கள் 1,54,536) - ( பெண்கள் 1,61,634 ) (மூன்றாம்பாலினம் 55) மொத்தம் - 3,16,225
190. சோழவந்தான் - (ஆண்கள் 1,01,588 ) - ( பெண்கள் 1,04,964 ) (மூன்றாம்பாலினம் 15 ) மொத்தம் -2,06,567
191.மதுரை வடக்கு (ஆண்கள் 1,01,559) - ( பெண்கள் 1,07,155 ) (மூன்றாம்பாலினம் 35) மொத்தம் - 2,08,749
192. மதுரை தெற்கு (ஆண்கள் 82,591) - ( பெண்கள் 85,463) (மூன்றாம்பாலினம் 44) மொத்தம் - 1,68,098
193. மதுரை மையம் (ஆண்கள் 91,109 ) - ( பெண்கள் 96,117 ) (மூன்றாம்பாலினம் 23) மொத்தம் - 1,87,249
194. மதுரை மேற்கு (ஆண்கள் 1,25,299 ) - ( பெண்கள் 1,29,618 ) (மூன்றாம்பாலினம் 10 ) மொத்தம் - 2,54,927
195. திருப்பரங்குன்றம் (ஆண்கள் 1,43,886 ) - ( பெண்கள் 1,49,768 ) (மூன்றாம்பாலினம் 33 ) மொத்தம் - 2,93,687
196.திருமங்கலம் (ஆண்கள் 1,21,249) - ( பெண்கள் 1,28,025 ) (மூன்றாம்பாலினம் 8) மொத்தம் - 2,49,282
197.உசிலம்பட்டி (ஆண்கள் 1,26,850 ) - ( பெண்கள் 1,27,587 ) (மூன்றாம்பாலினம் 5) மொத்தம் - 2,54,442
மாவட்டம் முழுவதும் மொத்தம் (ஆண்கள் 11,58,601) - ( பெண்கள் 12,01,319 ) (மூன்றாம்பாலினம் 237) மொத்தம் - 23,60,157