மேலும் அறிய
மதுரை மாவட்டத்தின் புதிய முயற்சி.. இயற்கை உணவு, பாரம்பரிய விவசாயம்: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு
இயற்கை பஜார் விற்பனை கண்காட்சியில் முதல் நாள் ரூ.6,60,552 , இரண்டாம் நாள் ரூ.7,57,816 என மொத்தம் ரூ.14,18,368 மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இயற்கை பஜார்
Source : whatsapp
பொதுமக்களிடையே இயற்கை உணவுப் பொருட்கள், பாரம்பரிய விவசாயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த ஒரு மாவட்ட நிர்வாகமும் எடுக்காத புதிய முயற்சியினை மதுரை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
மாமதுரை - இயற்கை மதுரை
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் “மாமதுரை - இயற்கை மதுரை” என்ற கருப்பொருள் அடிப்படையில் அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் இயற்கை பஜார் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. மாதத்தின் முதல் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கு அருகில் மகளிர் சுய உதவிக் குழுவினர்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்காக ஏற்பாடு செய்து இதுவரை 3 கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு ரூ. 2,10,000- மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இது போன்ற இயற்கை பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியை பெரிய அளவில் ஏற்பாடு செய்து பொதுமக்களிடம் இயற்கை பொருட்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக “மாமதுரை “இயற்கை மதுரை” என்ற கருப்பொருள் அடிப்படையில் இயற்கை பஜார் கண்காட்சி மற்றும் விற்பனை மதுரை தமுக்கம் மைதானத்தில் இரண்டு நாட்கள் 200 அரங்குகள் அமைத்து நடத்த திட்டமிடப்பட்டது.
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இக்கண்காட்சி
இந்த இயற்கை பஜாரில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறிய அளவு முதலீட்டில் பெரிய லாபம் ஈட்டுவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறைந்த பட்ச விற்பனைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அச்சிடப்பட்டுள்ள ரூ.50-, ரூ.100- மதிப்புடைய ரூ. 2,50,000 மதிப்பிலான கூப்பன்கள் விருப்பத்தின் அடிப்படையில் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் பாரம்பரிய நெல், அரிசி ரகங்கள், காளான் வகைகள், சிறு தானியங்கள் இயற்கை உரங்கள், அலங்கார செடிகள், Hydrophonics, Sanitary napkin, Herbal products, Jigarthanda, Jute bags, Cosmetics, medicine plants, Pooja items, Garden Tools, Herbal based insect and rat repellent, Health care products, Millet cookies, Organic Ice creams, உள்ளிட்ட பல்வேறு இயற்கை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இயற்கை பஜார் விற்பனை கண்காட்சியில் முதல் நாள் ரூ.6,60,552 , இரண்டாம் நாள் ரூ.7,57,816 என மொத்தம் ரூ.14,18,368 மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இயற்கை பஜார்
இயற்கை பஜாரில் அரங்குகள் அமைத்து பயன்பெற்ற விவசாயி அன்னவேல் காளிமுத்து தெரிவித்ததாவது...,” இயற்கை பஜாரில், தென்மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டது. மொத்தமாக சுமார் 200 கடைகள் வரை இந்த இயற்கை பஜாரில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே இயற்கை உணவுப் பொருட்கள், பாரம்பரிய விவசாயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த ஒரு மாவட்ட நிர்வாகமும் எடுக்காத புதிய முயற்சியினை மதுரை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களை விற்பனை செய்வதற்குரிய சந்தை வாய்ப்புகள் முன்பு இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது நடைபெறும் இந்த இயற்கை பஜாரில், செயற்கை உரங்கள் இன்றி விளைவிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவது மிகவும் எளிமையாக அமைந்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்தப் பஜார் அமைந்தது” எனத் தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















