மேலும் அறிய
மதுரையில் இளைஞர் தினேஷ்குமார் மரணம் - சிபிசிஐடி விசாரணை தீவிரம்.. அண்ணாநகர் காவல்துறை மீது சந்தேகம்?
இளைஞர் தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் அண்ணாநகர் ஆய்வாளராக பணிபுரிந்த பிளவர்சீலா ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் உயிரிழப்பு தொடர்பாக நடைபெற்ற போராட்டம்
Source : whatsapp
மதுரை அண்ணாநகர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட இளைஞர் தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.
கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு
மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார்(30) என்ற இளைஞரை கடந்த 9 ஆம் தேதி அதிகாலை அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மதியம் காவல்துறையினர் விசாரணையின்போது தப்பியோடிய தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அண்ணாநகர் காவல்துறையினர் தினேஷ்குமாரின் பெற்றோரிடம் கூறினர்.

தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கினை இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்
இந்த உயிரிழப்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 2 நாட்கள் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர். அதன்படி தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கினை இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இளைஞர் தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் அண்ணாநகர் ஆய்வாளராக பணிபுரிந்த பிளவர்சீலா ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விளையாட்டு
ஆட்டோ
ஆட்டோ
Advertisement
Advertisement