மேலும் அறிய
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் அரசு ஒத்துழைப்புடன் தூய்மை பணிகள் தொடரும் - மாவட்ட ஆட்சியர்!
மதுரையை மீண்டும் குப்பை இல்லா மதுரை என மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் - த.வெ.க. எம்.எல்.ஏ கல்லாணை விஜயன்பன் பேட்டி.

தூய்மைப் பணி
Source : whatsapp
மாமதுரையை தூய்மை நகராக மாற்ற வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை படி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் அரசு ஒத்துழைப்புடன் தூய்மை பணிகள் தொடரும் - மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பேட்டி.
மதுரையில் குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம்
மதுரை மாநகர் வக்பு கல்லூரி சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து வீசப்பட்ட குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் மற்றும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை விஜயன்பன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார்...," மதுரையை தூய்மை நகராக மாற்ற வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு மாநகராட்சி மட்டுமல்லாமல் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக மிக முக்கியம். சட்டமன்ற உறுப்பினர் என்னை நேரில் சந்தித்துபோது வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கக்கூடிய தூய்மை பணிகள் தொடர்பானவற்றை கூறினார். தமிழக அரசு சார்பில் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உதவியுடன் ஒரு மாபெரும் தூய்மை பணிகளை மதுரை மாநகராட்சியில் தொடங்க வேண்டும் என்ற கூறினார்.
மாபெரும் தூய்மை பணியினை தொடங்கியுள்ளோம்.
அதன்படி இன்று நான். சட்டமன்ற உறுப்பினர், 200 பேருக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், மாணாக்கர்கள், தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என அனைத்து நபர்களும் இணைந்து மாபெரும் தூய்மை பணியினை தொடங்கியுள்ளோம். மாநகரை தூய்மையாக வைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம் தூய்மை பணி என்பது ஒரு நாள் ஒரு நேரம் நடப்பது அல்ல ; எவ்வளவு குப்பைகளை அகற்றுவோமோ ; அதே அளவிற்கு குப்பை மீண்டும் வரும் அதனை தொடர்ந்து தூய்மைபடுத்த வேண்டும், இதேபோன்று மாநகராட்சி சார்பில் எங்கெங்கெல்லாம் குப்பை கொட்டுகிறார்களோ அந்த இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு போதுமான அளவிற்கு குப்பை தொட்டிகள் வைக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
பொது இடங்களில் வீசி செல்லும் பழக்கம் உள்ளது.
சில பகுதிகளில் வேலைக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள் தூய்மை வாகனம் வருவதற்கு முன்பாகவே வேலைக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் குப்பைகளை பக்கத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களில் வீசி செல்லும் பழக்கம் உள்ளது. அது போன்ற இடங்களில் மாநகராட்சி சார்பில் தூய்மை வாகனங்கள் அதிகாலையில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். வக்பு கல்லூரியில் இருந்து தொடங்கிய இந்த தூய்மை பணிகள் மதுரை மாநகராட்சியில் நிறைய இடங்களில் மக்களுடைய ஒத்துழைப்புடன் அரசு அலுவலர்களும் மாநகராட்சி அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் தொடர்ந்து நடைபெறும்
இது குறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை.." மதுரைக்கு கோயில் நகரம் என பெயர் இருந்த நிலையில் சமீப காலமாக குப்பை நகரமாக தற்போது உள்ளது. மதுரையை மீண்டும் குப்பை இல்லா மதுரை என மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்
Before You Go
Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















