மதுரை மக்களின் மதச்சார்பற்ற ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக முருகன், மீனாட்சி அம்மனுடன் இஸ்லாமியர்கள் அன்பை பரிமாறிக் கொண்ட கிறிஸ்மஸ் விழா - மதுரையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய வியாகுல அன்னை திருத்தல பேராலயத்தில் கொண்டாட்டம்.
கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலம்
உலகம் முழுவதும் வருகிற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மதுரை கீழ வெளி வீதி பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய வியாகுல அன்னை திருத்தல பேராலயத்தில் மதுரை மக்களின் மதச்சார்பற்ற ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக முருகன், மீனாட்சி அம்மனுடன் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. மதுரை தூய வியாகுல அன்னை திருத்தல பேராலயத்தில் சவேரியார் சாவடி டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற இந்த கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டத்தில், பேராலயத்தில் பங்குத்தந்தை ஹென்றி ஜெரோம், மதுரை மாநகராட்சி துணை மேயர் (மாநகராட்சி பொறுப்பு மேயர்) நாகராஜன், இஸ்லாமியர்கள், இந்து மக்கள் மற்றும் திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.
வேட அணிந்த குழந்தைகள் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக விழவில் கலந்துகொண்டனர்
மதுரையில் சர்ச்சையாகி உள்ள திருப்பரங்குன்றம் விவகாரத்தினல் மதுரை மக்களின் மதசார்பற்ற ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக முருகன், மீனாட்சி வேட அணிந்த குழந்தைகள் கிறிஸ்மஸ் தாத்தா உடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கேக்குகளை வெட்டி இஸ்லாமியர்களுக்கு கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டு ஒற்றுமையை பறைசாற்றி மக்களின் ஒற்றுமையை எடுத்துரைத்தனர். மதுரையில் சித்திரைத் திருவிழாவில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கலந்து கொள்வதும், திருப்பரங்குன்ற விவகாரத்தில் மதுரை மக்கள் ஒன்று கூடி நிற்பதும் தொடர்ந்து மதுரை மண்ணின் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைத்து வருகிறது. இந்நிலையில் மதுரையின் நூற்றாண்டு பழமை வாய்ந்த தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மதுரை மக்களின் மதச்சார்பற்ற ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக முருகன், மீனாட்சி அம்மனுடன் இஸ்லாமியர்கள் அன்பை பரிமாறிக் கொண்ட கிறிஸ்மஸ் விழா அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.