11 ஆண்டுகளுக்கு பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி தெரிவித்து மு.க.அழகிரி வீடியோ வெளியிட்டுள்ளார். மு.க.அழகிரியின் வீட்டுக்கு செல்லும் பகுதியில் புதிய தார் சாலைகள் அமைக்கப்படுவதால் மு.க.அழகிரி - மு.க ஸ்டாலின் சந்திப்பு நடைபெறும் என ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மதுரையில் நடைபெறும் தி.மு.க., பொதுக்குழு

49 ஆண்டு காலத்திற்குப் பிறகு வரும் ஜூன்-1 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 3000 பொதுக்குழுஉறுப்பினர் முன்னிலையில் 2026-தேர்தல் குறித்து அறிவிப்பு மற்றும் முக்கிய தீர்மானங்கள் உள்ளிட்டவைகளை நிறைவேற்றப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் என்ன தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர் என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் இடையே நிலவி வருகிறது. பொதுக்குழு கூட்டம் வெற்றி பெறுவதற்கும் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தினமும் காலை., மாலை., இரவு என பொதுக்குழு கூட்டம் நடைபெறும் உத்தங்குடி பகுதியில் பம்பரமாய் சுழன்று வருகிறார். அவருடன் அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர மாவட்ட செயலாளர்கள் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட திமுக முக்கிய பொதுக்குழு நிர்வாகிகள் மும்முரமாய் பணியாற்றி வருகின்றனர்.  

முக.அழகிரி வீடியோ

இந்நிலையில்., வரும் ஜூன்-1 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கவும் அதேபோல் முன்னாள் மதுரை மேயர் முத்துவின் திருவருவுச்சிலையானது வெண்கலத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை புது ஜெயில் ரோடு மேலபொன்னகரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் திமுகவின் பல ஆண்டுகளாக பனிப்போரில் இருந்து வந்த அண்ணன் முக.அழகிரிக்கும், தம்பி முக.ஸ்டாலினுக்கு இடையே ஆன மோதல் போக்கு என்பது சமீப காலமாக சற்று தளர்ந்து காணப்பட்டு வரும் நிலையில்., முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், திமுகவின் ஆரம்ப காலத்தில்., அண்ணா காலத்திலிருந்து திமுகவில் அவர் இருந்தவரை திமுகவை ஒரு பலம் பொருந்திய கட்சியாக மதுரையில் உருவாக்கியவர் முன்னாள் மேயர் அண்ணன் முத்து அவர்கள்.! அவரை என்னால் என்றுமே மறக்க முடியாது.!   எனக்கும் அவருக்கும் அதிக தொடர்பு இல்லாமல் இருந்தாலும்., அவருடைய உழைப்பு என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும்.! அவருடைய சிலையை என்னுடைய தம்பி மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.

11 ஆண்டிற்கு பிறகு மீண்டும் திமுகவில்?

 மு.க.அழகிரி தனது தம்பி முக.ஸ்டாலின் என வீடியோவில் கூறி இருப்பதும்., ஜூன்-1ல் திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளதை பார்க்கும் போது மீண்டும் முக.அழகிரி திமுகவில் முக்கிய பொறுப்பில் வர உள்ளாரா.? பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.   2014ஆம் ஆண்டு அன்றைய திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் ஜனவரி 24ஆம் தேதி முக.அழகிரியை திமுகவின் தென்மண்டல அமைப்பு செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது. முக.அழகிரி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு 11 ஆண்டிற்கு பிறகு மீண்டும் திமுகவின் முக்கிய பொறுப்பில் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டிற்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதிலும் புதிய தார்சாலைகளாக மாற்றப்படுவதால் ரோடு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக முக.அழகிரி வீட்டிற்கு செல்வார் சந்திப்பு நடத்துவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.