மதுரையில் சட்டமன்றத் தேர்தலுக்கான நடைமுறைகள் அமலானது. வாகன தணிக்கையில் ஈடுபட தயாராகிய பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவத்தினர்.

Continues below advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி 2026 வெளியாகி உள்ளது. இதன்படி ஏப்ரல் 23 அன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகு, மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன. இந்தத் தகவலை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இருந்து வெளியிட்டுள்ளார்.  

Continues below advertisement

ஏப்.23ம் தேதி, 2026 - தமிழக சட்டமன்ற தேர்தல்  

மார்ச் 30- வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்  

ஏப்ரல் 06 – வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள்  

ஏப்ரல் 07 - வேட்பு மனுபரீசீலனை  

ஏப்ரல் 09 - திரும்பப் பெற கடைசி நாள்  

ஏப்ரல் 23 - வாக்குப்பதிவு

 மே 4 - வாக்கு எண்ணிக்கை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் முழுவதிலும் தேர்தலுக்கான நடைமுறைகள் அமலுக்கு வரத்தொடங்கியது. அரசு அலுவலகம் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட அரசு விளம்பரங்கள் அகற்றம். தேர்தல் அறிவிப்பையடுத்து பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு மற்றும் நிலை குழு வாகனங்கள் Gps பொறுத்தப்பட்ட தொடங்கிய நிலையில் வாகன தணிக்கை பணிகளில் தொடங்க தயார் நிலையில் உள்ளன. மேலும் தேர்தல் நடைமுறை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ள நிலையில் பிரச்சாரங்கள் உள்ளிட்ட அனுமதிக்கான ஒற்றைச் சாரள முறையில் வழங்குவதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துணை ராணுவ படையினர் வருகை தர தொடங்கியுள்ளனர். இதனுடைய அரசு அலுவலங்களில் உள்ள அரசு விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.