மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் கொண்டு வரப்பட்டு உள்ள இ-பைலிங் முறையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு JAAC சார்பில் 7-1-2025 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என பேட்டி.
இ-பைலிங் எதிர்ப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)-ன் கட்டாய இ-பைலிங் எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சங்கங்களின் தலைவர், செயலாளர் நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் பாண்டிகோயில் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நந்தகுமார் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வன் மற்றும் மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கரன், செயலாளர் மோகன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு தழுவிய வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர், செயலாளர், நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். போராட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முழுமையாக திரும்பபெற வேண்டும்
”கடந்த 04.12.2025 தேதியன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற JAAC கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இ-ஃபைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 ஆம் தேதி முதல் இ-ஃபைலிங் முறையை கட்டாயமாக்கிய சுற்றறிக்கையிணை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து, முழுமையாக திரும்பபெற வேண்டும். வழக்கறிஞர்கள், வழக்காடிகள் தாக்கல் செய்யும் வழக்குகளை கோப்புக்கு எடுத்த பின்பு, நீதிமன்றமே ஸ்கேனிங் செய்து இணையத்தில் பதிவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 05.12.2025 முதல் காலவரையறையற்ற பணி புறக்கணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடுத்த கட்ட போராட்டமாக வருகிற 07.01.2026 தேதி அன்று வழக்கறிஞர் பெருமக்களை மாபெரும் அளவில் திரட்டி நமது கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்துவது என்றும், அதற்கான ஆயத்தப் பணிகளை முழு வீச்சில் செய்வது என்றும், மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 07.01.2026 ஆம் தேதியன்று நடைபெற உள்ள சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், அதற்கு தகுந்த ஏற்பாடுகளை அந்தந்த சங்கங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 07.01.2026 ஆம் தேதியன்று நடைபெற உள்ள சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் பார் கவுன்சில், உயர் நீதிமன்ற சங்கங்கள், சென்னையைச் சுற்றி உள்ள வழக்கறிஞர் சங்கங்களையும், மற்றும் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை சிறப்பாக செய்வதென்றும்
திரும்பப் பெற வேண்டும் என்று
சென்னை உயர் நீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் மாநில வழக்கறிஞர்கள் குமாஸ்தா சங்கம் பங்கேற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளதை வரவேற்பது என்றும், வருகிற 29.12.2025, 30.12.2025, 31.12.2025 மற்றும் 02.01.2026 தேதியன்று நடைபெறுவதாக இருக்கும் e-filing Training Program video conferencing மூலம் நடத்துவத்தைக சென்னை உயர்நீதிமன்றம் ROC No. 42577A/2024 யை புறக்கணிப்பது என்றும் மேற்கண்ட காணொளி காட்சி பயிற்சியில் வழக்கறிஞர்கள் யாரும் பங்கேற்காமல் பணிவிலகல் செய்வது என்றும், ஜாக்கின் பொதுச் செயலாளர் அவர்கள் கும்பகோணத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு எடுத்த தீர்மானத்தை மட்டுமே அறிவித்தார், இது நாள் வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவிற்கு தன்னலமற்று நேர்மையாக செயல்பட்டுள்ளார் அவரின் மீது தவறான புரிதல் கொண்டு திருச்சி வழக்கறிஞர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. நமது ஒருங்கிணைப்புக் குழு திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் நிர்வாகிகளை சந்தித்து நமது பொதுச் செயலாளர் அவர்களை இடைநீக்கம் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்றும், மேற்கண்ட தீர்மானங்கள் நமது ஜாக் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அனைத்து தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களும் நமது போராட்டங்களை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தனர்.