மேலும் அறிய
மதுரை, தேனியில் மருத்துவத்துறையில் காலிப்பணியிடம்... உடனே அப்ளை பண்ணுங்க, முழு விவரம் உள்ளே !
பணியாளர் தேர்வானது தேசிய நலச் சங்க தேர்வு விதிகளில் தெரிவித்துள்ளபடி, நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மருத்துவப் பணி
Source : whats app
இந்த மருத்துவப் பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
வெளியான தகவல்
”மதுரை மாவட்ட நலச் சங்க கட்டுப்பாட்டின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட நலவாழ்வு சங்க தலைவர் அவர்களால் ஆயுஷ் குழுமம், தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் காசநோய் ஒழிப்புத்திட்ட அலகில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி,
1) ஒரு மருத்துவ ஆலோசகர் (யோக மற்றும் இயற்கை) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.40,000/-, வயது 59க்குள், BNYS பட்டம் படித்தவர்கள்.
2) ஒரு மருத்துவ ஆலோசகர் (யுனானி) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.34,000/-, வயது 59க்குள், BUMS பட்டம் படித்தவர்கள்.
3) ஐந்து சிகிச்சை உதவியாளர் (ஆண்-3, பெண்-2) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15,000/-வயது 59க்குள் Nursing Therapist Course.
4) ஒரு மருந்து வழங்குநர் பதவி காலியிடத்திற்கு தினக்கூலி ஊதியம் ரூ.750/-, வயது 59க்குள் D.Pharm / Integrated Pharmacy course பட்டம் பெற்றவர்கள்.
5) மூன்று பல்நோக்குப் பணியாளர் பதவி காலியிடத்திற்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.8500/-வயது 59க்குள், எட்டாம் வகுப்புத் தேர்ச்சி.
6) இரண்டு பல்நோக்குப் பணியாளர் பதவி காலியிடத்திற்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10,000/-, வயது 59க்குள், எட்டாம் வகுப்புத் தேர்ச்சி.
7) முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.19,800/-வயது 40க்குள், 1) Graduate or Diploma in Medical Laboratory Technology or Equivalent from a Govt. recognized institution. 2) Permanent two wheeler driving license and should be able to drive Two wheeler. 3) Certificate course in computer operations (minimum two months) பட்டம் படித்தவர்கள்.
8) காசநோய் சுகாதார பார்வையாளர் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.13,300/- வயது 40க்குள் 1) Graduate in science or 2) Intermediate (10, +2) in science and experience of working as MPW/LHV/ANM / Health worker/ Certificate of higher course in Health
Education / Counselling. Or 3) Tuberclosis health visitor's recognized course. 4) Certificate Course in computer operation (minimum two months)”
இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது மாவட்ட செயற்செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி எண். 0452-2640778) என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது dphmdu@nic.in மின்னஞ்சல் மூலமாகவோ இறுதி நாளான 10.09.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பணியாளர் தேர்வானது தேசிய நலச் சங்க தேர்வு விதிகளில் தெரிவித்துள்ளபடி, நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தகுதியின் அடிப்படையிலும் (இருப்பிடம், மதிப்பெண், உடல்தகுதி, முன் அனுபவம், இதர சிறப்புத் தகுதிகள்) இனச் சுழற்சி முறையிலும் நியமிக்கப்படுவர் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















