மேலும் அறிய

பாகுபலி பட பாணியில் சிறுவனை கொலை செய்து கையில் தூக்கி மாடியில் இருந்து வீசிய கொடூர கொலைகார கும்பலை சேர்ந்த 5 பேர் கைது !

கொலையாளியின் தாயார் வைத்திருந்த பழக்கடையை ஆத்திரத்தில் சிதறடித்த கொலையுண்ட சிறுவனின் குடும்பத்தினர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிப்படுகொலை -  ஒருவருக்கொருவர் உரசியதால் உருவான பகை- பாகுபலி பட பாணியில் சிறுவனை கொலை செய்து கையில் தூக்கி மாடியில் இருந்து வீசிய கொடூர கொலைகார கும்பலை சேர்ந்த 5 பேர் கைது.

சிறுவன் குபேந்திரனை கொலை செய்துவிட வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டுவருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு நின்றுகொண்டிருந்த வடக்கு மாசி பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது கொலையுண்ட சிறுவன் குபேந்திரன் தனது நண்பர்களுடன் கழிவறைக்கு சென்றபோது அங்கு முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி வந்தபோது எதிர்பாரமல் உரசியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கியபோது முத்துமணிக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த  முத்துமணி @ தொத்தல் முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் சிறுவன் குபேந்திரனை கொலை செய்துவிட வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளனர்.

வெட்டி படுகொலை செய்துள்ளனர்

இந்நிலையில் நேற்றிரவு சிறுவன் குபேந்திரன் மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங் வணிகவளாகத்தில் மேல்மாடிக்கு நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு 2 பைக்குகளில் வந்த முத்துமணி மற்றும் அவனது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார் ,ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் கார் பார்க்கிங் மேல் வைத்து குபேந்திரனை சரமாரியாக  வெட்டியுள்ளனர். அப்போது குபேந்திரன் ஓட முயற்சித்தபோதும் விரட்டி வெட்டியுள்ளனர். பின்னர் கழுத்தில் வெட்டி தலைமுடியை பிய்த்து எடுத்து 57 இடங்களில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனையடுத்து பாகுபலி படத்தில் வருவதுபோல குபேந்திரனின் உடலை நிர்வாணமாக்கி கையில் தூக்கியபடி மேலிருந்து கீழே போட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனால் சம்பவ இடத்திலயே குபேந்திரன் உயிரிழந்த பின்னர் கொலை செய்த கும்பலானது அங்கிருந்து  தப்பியோடியதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொலைவழக்குப்பதிவு செய்த விளக்குத்தூண் காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மதுரை திடீர் நகரை சேர்ந்த  முத்துமணி 28 மற்றும் அவனது உடன்பிறந்த தம்பி ராஜ் 26 மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்த  சதீஷ்குமார் வயது 28, வடக்கு மாசி வீதியை சேர்ந்த  ஹரி கிருஷ்ணன் 18, மற்றும் திடீர் நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் 19 ஆகியோரை கைது செய்தனர். மேலும்  கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.

தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்தனர்

வடக்கு ஆவணி மூல வீதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கார் பார்க்கிங்கில் உள்ள வணிக வளாக கட்டடத்தில் ஒப்பந்ததாரர்கள் மூலமாக  எடுக்கப்பட்ட கடைகளில் சமூகவிரோத கும்பல்களை இரவில் தங்க வைப்பதாகவும் தொடர்ந்து அந்த பகுதியில் மது அருந்துவது போதை பொருட்கள் பயன்படுத்துவது என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் நாள்தோறும் இரவு நேரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே காவல்துறையினர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள மீனாட்சி அம்மன் கோவில் அருகே இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொலை சம்பவம் குறித்து பேசிய சிறுவனின் தாயார் தாமரை செல்வி : எனது மகனை கொலை செய்துவிட்டு மேலிருந்து தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்தனர் - கொலைக்கு காரணமான மேலும் சிலரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
சிபிஎஸ்இ (CBSE) விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடு.. மேல்நடவடிக்கை குறித்து ஒன்றிய அமைச்சகம் பதில் - மதுரை எம்.பி !
அரசாங்கம் விசிலில் இருந்து அசலுக்கு வர வேண்டும் - தமிழிசை மதுரையில் பேட்டி !
அரசாங்கம் விசிலில் இருந்து அசலுக்கு வர வேண்டும் - தமிழிசை மதுரையில் பேட்டி !
தேனி: கொட்டக்குடி கிராமத்திற்கு முதல் முறையாக அரசு பேருந்து சேவை தொடக்கம்!
தேனி: கொட்டக்குடி கிராமத்திற்கு முதல் முறையாக அரசு பேருந்து சேவை தொடக்கம்!
மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
26 லட்சம் ஏக்கர் தரிசாகும் பேராபத்து: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக விழிக்குமா தமிழகம்?
Embed widget