திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது என்றும் இஸ்லாமியர்கள் யாரும் வந்து தகராறு செய்யவில்லை என்று நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார்.

Continues below advertisement

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் 24-ம் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இன்று மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டது.

சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்  

இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர். பின்னர் கோயில் ஸ்தானிகர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மாலை 5 மணிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது.

Continues below advertisement

இதனை மலையடிவாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்த  முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். இன்று நடைபெற்ற தீபமேற்றும் நிகழ்வில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர பக்தர்கள், பொதுமக்கள் மலையேற அனுமதி வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!

தீபம் ஏற்றியது சந்தோஷம்

இந்நிலையில் தீபம் ஏற்றிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதன்: இன்று மாலைக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நாங்கள் அதற்கான நடவடிக்கையை எடுத்தோம். அடுத்தக்கட்ட நிர்வாக நடவடிக்கை குறித்து நானும், பார்த்திபனும் அமர்ந்து பேசி ஆலோசித்து முடிவெடுப்போம். தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றிருக்கிறோம். 

எந்த பிரச்சனையும் இல்லை

இங்கு எங்கள் கைப்பட தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது. எந்த பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் தூணில் தீபம் ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் யாரும் வந்து தகராறு செய்யவில்லை.  அவர்கள் எல்லோரும் சகோதரர்கள். இதை அரசியலாக்கி சர்ச்சையாக்குகிறார்கள் என தெரிவித்துள்ளார்.