விஜய் ஏதோ நடித்துப் பார்க்கிறார். டான்ஸ் ஆடி பார்க்கிறார். இந்த டான்ஸ் பழைய டான்ஸ். இந்த டப்பாங்குத்து நம்ம ஊரிலும் ஆடலாம். நான்காண்டுகளாக எடப்பாடி எங்கு சென்றார் என தெரியவில்லை. தற்போது தான் மக்களை சந்தித்து வருகிறார் - ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டி.

Continues below advertisement

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அமைச்சர் இ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழ்நாட்டில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும், அரசியலில் என்ன செய்யப் போகிறோம் என்ற கருத்தை சொல்லவில்லை. வீட்டில் முடங்கி இருக்கிறார். இது எடுபடாது. இது சினிமா ரசிகர்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. மக்கள் எல்லா அரசியலையும் பார்த்துவிட்டனர்.நிலைத்த அரசியலுக்கும் புகழுக்கும் ஒரே இயக்கம் திமுக தான். இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சராக மு க ஸ்டாலின் உள்ளார்.

Continues below advertisement

திமுகவிற்கு மக்களின் ஆதரவு 70% உள்ளது. விஜய் தேர்தலில் வந்து நிற்கட்டும் பின் பார்ப்போம்.நாங்கள் விமர்சிக்கவில்லை. எம்ஜிஆரை விமர்சித்தது வேறு. யாராக இருந்தாலும் எந்த இயக்கமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக விமர்சிப்போம். இன்றைக்கு அகில இந்திய கட்சி கிடையாது. திமுகவை முன்னாள் முதல்வர் அண்ணா, கருணாநிதி வளர்த்ததை போல் தற்போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் அதைவிட அதிகமாக வளர்த்து வருகிறார்.

விஜய் அரசியல்வாதியே கிடையாது. மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். சாதாரண கரூர் சம்பவத்திற்கு கூட எட்டிப் பார்க்கவில்லை. அவர் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார். தமிழக வரலாற்றில் 41 பேர் கூட்ட நெரிசலில் தண்ணீர் இல்லாமல் இறந்து இருக்கும் நிலையில், அவர்கள் இறந்தது தெரிந்தும் அவர்களை வந்து பார்க்க மனமில்லை. இவர் எப்படி 7 கோடி மக்களை காப்பாற்ற போகிறார். ஏதோ நடித்துப் பார்க்கிறார். டான்ஸ் ஆடி பார்க்கிறார். இந்த டான்ஸ் பழைய டான்ஸ். இந்த டப்பாங்குத்து நம்ம ஊரிலும் ஆடலாம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் நூறு ஆண்டுகள் பழமையான கட்சி அதனால் அதிக சீட்டுகள் இந்த முறை திமுகவிடம் கேட்போம் என கூறியது குறித்த கேள்விக்கு,

கேட்பது அவர்களின் உரிமை வெற்றி வாய்ப்பு பார்த்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சீட்டுகளை ஜனநாயக ரீதியில் வழங்குவார். அரசியல் ரீதியாக எங்களுடன் கூட்டு அமைத்து எந்த ஒரு இயக்கமும் இத்தனை ஆண்டு காலம் ஒரே அணியாக இருந்ததில்லை. அந்த கூட்டணி தான் தொடர்கிறது. அந்த கூட்டணி தான் மிகப்பெரிய வெற்றிபெறப்போகிறது. சட்டமன்றம் முடிந்து பஞ்சாயத்து தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் திமுகவே வெல்லும். இனி வரிசையாக வெற்றி தான். நான்காண்டுகளாக எடப்பாடி எங்கு சென்றார் என தெரியவில்லை.

தற்போது தான் மக்களை சந்தித்து வருகிறார். நான்காண்டு காலம் மக்களை சந்திக்காத எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி மக்களை சந்திக்க என்ன முகாம் உள்ளது. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஓபிஎஸ் திமுகவிற்கு வந்தால் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முடிவு செய்வார். அண்ணாமலை திடீர் திடீரென ஏதாவது கூறுவார். ஐந்து வருடம் எதுவும் சொல்லவில்லை தற்போது பழனியில் வந்து ஆர்ப்பாட்டம் செய்யப்போகிறேன் எனக் கூறுகிறார், பழனிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என கூறினார்.