மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
வெளி ஊர்களிலிருந்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தனியார் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்குகின்றனர். குறிப்பாக தொடர் விடுமுறை தினங்கள் நாட்களில் வருகை தரும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்குகின்றனர். அவ்வாறு வரும் அறை எடுக்கப்படும் தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகளிடையே புகார் எழுந்து வந்த நிலையில் ஏற்கனவே கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனியார் தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி உரிமையாளர்களுக்கு கோட்டாட்சியர் தலைமையில் புகார் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், உணவு விடுதிகளில் உணவு தயார் செய்ய பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது. உணவு பொருட்களில் வண்ணப்பொடிகள் பயன்படுத்த கூடாது. காலாவதியான இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை பயன்படுத்த கூடாது மற்றும் உணவு விடுதிகளில் கட்டாயமாக விலை பட்டியல் அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தபட்டது.
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
மேலும் தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளை பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளை 24 மணி நேரம் தங்குவதற்கு ஒரு நாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும், அவ்வாறு வசூலிக்காமல் சுற்றுலா பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் தங்கும் விடுதிகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது கோடை கால தொடர் விடுமுறை தினங்கள் வரவுள்ள நிலையில், கோடை கால சீசனுக்காக கொடைக்கானல் தயாராகி வரும் நிலையில் மீண்டும் தனியார் தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது. தனியார் தங்கும் விடுதிகளில் பயணிகள் தங்குவதற்கு 24 நேரம் அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் எந்த நேரத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினாலும் மறுநாள் காலை 10 மணிக்கு அறையை காலி செய்ய வேண்டும் என்பது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.